இந்தியாவில் கழிவுநீர் ஓடைகளில் மனிதர்கள் இறங்கி சுத்தப்படுத்தும் முறை நீடிப்பதற்கு உச்சநீதிமன்றம் தனது கடும் அதிருப்தி!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் கழிவுநீர் ஓடைகளில் மனிதர்கள் இறங்கி சுத்தப்படுத்துவது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி அருள் விஷால் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.  அப்போது, சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில் சாதி பாகுபாடி இன்னும் நாட்டில் தொடர்கிறது.  இன்னும் கழிவுநீர்த் தொட்டி சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்குத் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட சாதியினரை மட்டுமே சமூகம் பயன்படுத்துகிறது. 


மனிதர்கள் அனைவரும் சமமானவர்கள்தான் ஆனால், அவர்கள் அனைவருக்கும் சமமான உரிமை , வசதிகள் அளிக்கப்படுகிறதா? கழிவுநீர்த் தொட்டிக்குள் இறங்கும் தொழிலாளர்களுக்கு முறையாக  பாதுகாப்பு கவசமான முகமூடி, ஆக்ஸிஜன் சிலிண்டர், ஏன் வழங்கப்படுவதில்லை?. கழிவுநீர் தொட்டிக்குள் மனிதர்களை அனுப்பி விஷவாயுவில் இறக்கச் செய்யும் அவலம் உலகில் எந்த நாட்டிலும் இல்லை. ஒவ்வொரு மாதமும் 4 முதல் 5 பேர் கழிவுநீர்த் தொட்டியில் சிக்கி இறக்கிறார்கள். 


கழிவு நீர்த் தொட்டிக்குள் இறங்கி சுத்தம் செய்யும் மனிதருக்குப் போதுமான பாதுகாப்பு கவசங்கள் இல்லாமல் பணியைச் செய்ய வற்புறுத்துவது மனித  தன்மையற்றது. இதன் மூலம் நாட்டில் தீண்டாமை மறைமுகமாக இருக்கிறது என்று நம்புகிறோம். 


இந்திய அரசியலமைப்பு தீண்டாமையை ஒழித்துவிட்டது. நான் உங்களிடம் கேட்கிறேன். கழிவு நீர்த் தொட்டியை சுத்தம் செய்யும் தொழிலாளியுடன் கை குலுக்குவீர்களா? அதற்கு இல்லை என்று தானே  பதில். இந்த வழியில்தான் நாம் சென்று கொண்டிருக்கிறோம்.சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளைக் கடந்த பின்பும் இன்னும் இது போன்ற கொடுமை நடந்து வருகிறது” என நீதிபதிகள் தெரிவித்தனர்.