16:58 | 17-08-2018



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாச்பாய்-க்கு 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க வளர்ப்பு மகள் நமீதா எரியுட்டினார். 




16: | 17-08-2018


முப்படை வீரர்களின் மரியாதையுடன் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் தகனம் செய்யப்பட்டது.....



16:31 | 17-08-2018


வாஜ்பாயின் மீது போர்த்தபட்டிருந்த தேசியக்கொடி வாஜ்பாயின் பேத்தி நிகாரிகாவிடம் ஒப்படைக்கப்பட்டது! 




16:15 | 17-08-2018


முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடலுக்கு வெளிநாட்டு தலைவர்கள் அஞ்சலி....



டெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடலுக்கு பூட்டான் மன்னர் ஜிக்மே வாங்சுக் இறுதி அஞ்சலி செலுத்தினார்




16:01 | 17-08-2018


மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடலுக்கு முப்படை வீரர்கள் இறுதி மரியாதை.....




15:51 | 17-08-2018


டெல்லி ஸ்மிருதி ஸ்தல் பகுதிக்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் கொண்டு செல்லப்பட்டது. இறுதி மரியாதைக்கு பின் வாஜ்பாயின் உடல் தகனம் செய்யப்படவுள்ளது....




15:35 | 17-08-2018


டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் இருந்து வாஜ்பாய் உடல் இறுதி ஊர்வலம் தொடங்கி நடக்கிறது. பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோர் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர்....




14:54 | 17-08-2018




14:21 | 17-08-2018


டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இருந்து வாஜ்பாய் உடல் இறுதி ஊர்வலம் தொடங்கியது! 




12:50 | 17-08-2018


டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா மற்றும் ஏ.ஏ.பி. எம்.பிக்கள் சஞ்சய் சிங் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்....




12:09 | 17-08-2018


டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு அத்வானி மற்றும் அவரது மகள் பிரதிபா அத்வானி ஆகியோர் அஞ்சலி....




11:31 | 17-08-2018


டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு உ.பி முதலவர் யோகி ஆதித்தநாத் அஞ்சலி....




11:00 | 17-08-2018


டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு பிரதமர் மோடி, அமித்ஷா அஞ்சலி....




11:05 | 17-08-2018


மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்டது...




10:00 | 17-08-2018


கிருஷ்ணா மேனன் பார்க்கில் உள்ள வாஜ்பாய் இல்லத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட ராணுவ ஊர்தியில் வாஜ்பாய் உடல் பாஜக அலுவலகத்திற்கு கொண்டுசெல்லப்படுகிறது....பண்டிட்தீ்ன்தயாள் உபாத்யாய் மார்க்கில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாயின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. பிற்பகல் 1 மணி வரை பாஜகவினர், பொதுமக்கள், தலைவர்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்படவுள்ளது...




8:30 | 17-08-2018


டெல்லியில் உள்ள இல்லத்தில் வாஜ்பாய் உடலுக்கு ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு நேரில் அஞ்சலி.....




08:28 | 17-08-2018


டெல்லியில் உள்ள இல்லத்தில் வாஜ்பாய் உடலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரில் அஞ்சலி.....




இந்தியாவின் அனைத்து மொழி நாளிதழிலும் முன் பக்கத்தில் இடம்பெற்ற அடல் பிஹாரி வாஜ்பாயின் மறைவு! 


பா.ஜ.க-வின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாய் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை காலமானார். இவரது மறைவுக்கு நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்பட்டுள்ளது.


டெல்லி கிருஷ்ணன் மேனன் மார்க்கில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள வாஜ்பாய் உடலுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், நாடு முழுவதும் 7 நாள் துக்கம் அனுசரிக்கபட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும், இன்று மாலை 5 மணியளவில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு இறுதி சடங்கு நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. 


இதை தொடர்ந்து, இந்தியாவின் உள்ள அனைத்து மொழி நாளிதழ்களும் அதன் முன் பக்கத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.