மம்தா எடுத்த முடிவு! துணை ஜனாதிபதி தேர்தலுக்கு முன் எதிர்க்கட்சிகளுக்கு பெரும் அடி
Vice President Election: மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குடியரசு துணைத் தலைவர் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு.
கொல்கத்தா: துணை ஜனாதிபதி தேர்தலில் என்டிஏ வேட்பாளர் ஜெகதீப் தன்கருக்கு தனது கட்சி ஆதரவு அளிக்காது என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்பி அபிஷேக் பானர்ஜி அறிவித்தார். மேலும் குடியரசு துணைத் தலைவர் தேர்தலை புறக்கணிப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் அறிவிப்பு எதிர்கட்சிகள் இடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் இந்த முடிவு எடுக்க காரணமாக, எதிர்க்கட்சி துணை குடியரசுத்தலைவர் வேட்பாளராக மார்க்ரெட் ஆல்வாவின் பெயரை ஆலோசிக்காமல் அறிவித்தது தான் எனக் கூறப்படுகிறது.
இரு அவைகளிலும் 35 எம்.பி.க்கள் உள்ள கட்சியுடன் உரிய ஆலோசனையின்றி எதிர்க்கட்சி வேட்பாளரை முடிவு செய்த விதம், அதனால்தான் வாக்கெடுப்பில் இருந்து விலகி இருக்க ஒருமனதாக முடிவு செய்துள்ளோம் எனக் கூறினார்.
எந்தவொரு கருத்தியல் வேறுபாடும் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை பலவீனப்படுத்தாது என்று அபிஷேக் பானர்ஜி கூறினார். எந்த எதிர்க்கட்சியானாலும் ஆம் ஆத்மி, தி.மு.க. உட்பட எந்த கட்சியும் விவாதிக்க விரும்பினால், எந்த வகையான விவாதத்திற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றார்.
மேலும் படிக்க: குடியரசுத் தலைவர் தேர்தல் - ரிசர்வ வங்கியிடம் கடன் கேட்ட வேட்பாளர்
என்.டி.ஏ. வேட்பாளரை, குறிப்பாக ஜக்தீப் தன்கரை ஆதரிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆனால், இன்று நடந்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பிற்குப் பிறகு, துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் இருந்து விலகிக் கொள்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது" என்று திரிணாமுல் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் பானர்ஜி தெரிவித்தார்.
ராஜஸ்தான் மாநில முன்னாள் ஆளுநர் மார்கரெட் ஆல்வாவை எதிர்க்கட்சிகள் கூட்டு வேட்பாளராக நிறுத்த ஞாயிற்றுக்கிழமை எதிர்கட்சிகள் முடிவு செய்தன. 17 எதிர்க்கட்சிகளின் கூட்டு துணை ஜனாதிபதி வேட்பாளராக மார்கரெட் ஆல்வாவை என்சிபி தலைவர் சரத் பவார் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, ஜூலை 21ம் தேதி இது குறித்த தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவதாக டிஎம்சி கூறியிருந்தது. எதிர்க்கட்சிகள் மார்கரெட் ஆல்வாவை ஒரு பக்கம் நிறுத்திய நிலையில், NDA தனது வேட்பாளராக மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கரை முன்னிறுத்தியுள்ளது.
மேலும் படிக்க: குடியரசுத் தலைவர் தேர்தலில் பயன்படுத்தப்படும் ‘அழிக்க’ முடியாத சிறப்பு ‘MARKER PEN’
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ