மேற்கு வங்காளம் மாநிலத்தின் திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி எம்.எல்.ஏ., இன்று பாஜகவில் இணைந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேற்கு வங்காளம் மாநிலத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் மிகப்பெரிய சரிவை சந்தித்து பாஜக அதிக இடங்களை பிடித்துள்ளது.


இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் சுப்ரான்ஷு ராய், துஷார்காந்தி பட்டாச்சார்ஜீ மற்றும் மா.கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. தேவேந்திர ராய் மேற்கு வங்காளம் மாநில சட்டசபை உறுப்பினர்கள் நேற்று பாஜகவில் இணைந்தனர்.


டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இணைப்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில், பாஜக தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வார்கியா, மேற்கு வங்காளத்தை சேர்ந்த அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான முகுல் ராய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


மேலும் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ., மனிருல் இஸ்லாம் இன்று கைலாஷ் விஜய்வார்கியா இன்று முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். அவருடன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த நிர்வாகிகள் கடாஹர் ஹசாரா, முஹம்மது ஆசிப் இக்பால், நிமாய் தாஸ் ஆகியோரும் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.