திருமணம் ஆன இஸ்லாமிய ஆண் தனது மனைவியை விவாகரத்து செய்ய முத்தலாக் நடை முறைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் 5 முஸ்லிம் பெண்கள் வழக்கு தொடர்ந்தன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் 5 நீதிபதிகள் அரசியல் சாசன அமர்வு, முத்தலாக் சட்ட விரோதமானது, அரசியல் சாசனத்துக்கு எதிரானது, இது செல்லத்தக்கது அல்ல என்று தீர்ப்பளித்தது. அதைத்தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத்தொடரில் முத்தலாக்குக்கு தடை விதித்து புதிய மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.


இந்நிலையில், முத்தலாக் வழக்கு தொடுத்த ஒருவரான இஷ்ரத் ஜஹான், மேற்கு வங்காள மாநிலத்தின் ஹவுரா நகரில் பாஜக-ல் இணைந்தார்.