திரிபுரா மாநிலத்தில் கிடைக்கப்பெறும் உபரி மின்சாரம் அண்டை நாடான நேபாளத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது என மாநில துணை முதல்வர் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது குறித்து திரிபுரா துணை முதல்வர் ஜிஸ்னு தேவ்வர்மா தெரிவிக்கையில்., "சூரிய மின்சாரம் தயாரிப்பதில் மாநில அரசு இப்போது முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதனை தொடர்ந்து மாநில செயலகம், சட்டமன்றம், உயர்நீதிமன்றம் உட்பட முக்கிய அரசு அலுவலகங்களை முழுமையாக சூரிய சக்தியாக மாற்றப்பட்டு வருகிறது.


மாநிலத்தில் தற்போது நுகர்வோருக்கு தினமும் 300 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. மாநிலத்தில் பாஜப கூட்டணி ஆட்சி அமைந்த பின்னர் சவுபாக்யா திட்டத்தின் மூலம் 1.36 லட்சம் புதிய மின் இணைப்புகளை அளித்துள்ளது. 


மேலும் அசாம் (240 மெகாவாட்), திரிபுரா (196 மெகாவாட்), மேகாலயா (79 மெகாவாட்), மணிப்பூர் (42 மெகாவாட்), நாகாலாந்து (27 மெகாவாட்), அருணாச்சல பிரதேசம் மற்றும் மிசோரம் (22 மெகாவாட்) ஆகிய மாநிலங்களுக்கு மத்திய அரசின் மின் தொகுப்பில் இருந்து 58% அளவிற்கு மின்சாரம் அளிக்கப்படுகிறது.


இவைபோக பல ஆண்டுகளாக 190 மெகாவாட் உபரி மின்சாரத்தை வங்கதேசத்திற்கு விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து 40 மெகா வாட் மின்சாரம் நேபாள நாட்டிற்கு விற்பனை செய்ய தொடங்கியுள்ளது.


உபரி மின்சாரம் விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் வருவாய் மாநில மின் சக்தி நிறுவனத்தை உருவாக்க பயன்படுகிறது" என தெரிவித்துள்ளார்.