வெங்காயத்தின் விலை மேலும் உயர வாய்ப்பு இருப்பதாக தகவல்!
இந்தியாவில் வெங்காயத்தின் விலை மேலும் உயர வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!
இந்தியாவில் வெங்காயத்தின் விலை மேலும் உயர வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!
கடந்த நான்கு மாதங்களாக வெங்காயத்தின் விலை விண்ணை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறது. ஒரு கிலோ வெங்காயத்தினை ரூ.100-க்கு வாங்குவது தற்போது அனைவருக்கும் பொதுவான ஒன்றாக மாறிவிட்டது. இவ்வளவு நாட்கள் கழிந்த பிறகும், வெங்காயத்தின் விலை குறைவது போல் தெரியவில்லை.
வெளிநாட்டு வெங்காயத்தின் வருகையால் விலை உயர்வு தடைப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்போது இந்த வழியும் நமக்கு இருண்ட வழினையே காட்டுகிறது. காரணம் துருக்கி வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய தடை விதித்துள்ளது.
உலகில் வெங்காயத்தின் முக்கிய உற்பத்தியாளர் துருக்கி என கூறப்படுகிறது. இந்தியாவில் தேவைக்காக துருக்கியை எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது துருக்கியில் கொண்டுவந்திருக்கும் தடை, இந்தியாவின் வெங்காய தேவை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. அதே நேரத்தில், நாட்டின் மிகப்பெரிய வெங்காயம் உற்பத்தி செய்யும் மாநிலமான மகாராஷ்டிராவில், பருவமழை காரணாம வெங்காய உற்பத்தி குறையலாம் என கனிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வெங்காயத்தின் விலை மீண்டும் உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வியாழக்கிழமை, நாட்டின் தலைநகர் டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெங்காயத்தின் சில்லறை விலை கிலோவுக்கு ரூ.100-140-ஆக இருந்தது. இருப்பினும், மத்திய நுகர்வோர் விவகார அமைச்சின் இணையதளத்தில் கொடுக்கப்பட்ட விலை பட்டியலின்படி, டெல்லியில் வெங்காயத்தின் சில்லறை விலை கிலோ ஒன்றுக்கு ரூ.107 ஆகும்.
அமைச்சின் வலைத்தளத்தின்படி, நாடு முழுவதும் வெங்காயத்தின் சில்லறை விலை வியாழக்கிழமை ஒரு கிலோவுக்கு ரூ.48-150-ஆக இருந்தது. செய்தி நிறுவனமான IANS படி, டெல்லியின் ஆசாத்பூர் மண்டி விவசாய உற்பத்தி சந்தைப்படுத்தல் குழுவின் (APMC) விகித பட்டியலின்படி, டெல்லியில் வெங்காயத்தின் மொத்த விலை வியாழக்கிழமை ஒரு கிலோவுக்கு ரூ.20-95-ஆக இருந்தது, அதே நேரத்தில் வருகை 1020.3 டன்னாக பதிவாகியுள்ளது.