COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ட்விட்டர் தளத்தில் இந்திய வரைபடத்தில் இருந்து பிரித்து காஷ்மீரை தனி நாடாகக் காட்டியது தொடர்பாக இந்தியாவின் ட்விட்டர் நிர்வாக இயக்குனர் ம்னீஷ் மகேஷ்வரி மீது வழக்கு பாய்ந்துள்ளது. இந்த விவகாரத்தில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அந்த சர்ச்சைக்குரிய மேப்பை ட்விட்டர் நிறுவனம் நீக்கி உள்ளது.


இந்தியாவின் தவறான வரைபடத்தை தனது இணையதளத்தில் காட்டியதற்காக நிர்வாக இயக்குநர் மனீஷ் மகேஸ்வரி மீது இந்திய தண்டனைச் சட்டம் (IPC) பிரிவு 505 (2) மற்றும் 2008 ஆம் ஆண்டின் ஐடி (திருத்த) சட்டம்   பிரிவு 74 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புகாரை புலந்த்ஷாரில் உள்ள பஜ்ரங் தளத் தலைவர் ஒருவர் பதிவு செய்துள்ளார்.


ட்விட்டர்  (Twitter)  இந்த தவறை செய்வது இது முதல் முறையல்ல சென்ற வருடம் இதே தவறை செய்தது.  ஜம்மு காஷ்மீர் லடாக்கை சீனாவின் பகுதிகளாக காட்டி சர்ச்சை ஏற்படுத்தியது. பின்னர் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில்,  மன்னிப்பு கேட்டது. 


ALSO READ |   Twitter India இடைக்கால குறை தீர்க்கும் அதிகாரி ராஜினாமா; அடுத்தது என்ன 


ஏற்கனவே, காஸியாபத்தில் இஸ்லாமியர் ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தவறாக சித்தரித்து, போலி செய்தி வெளியிட்டு மத கலவரத்தை தூண்ட முயற்சித்த விவகாரத்தில் ட்விட்ட இண்டியா மீது வழக்கு பதியப்பட்டது.  இதை அடுத்து, ட்விட்டர் இந்தியா முன் ஜாமீன் வாங்கியிருக்கிறார் நிர்வாக இயக்குநர் மனீஷ் மகேஸ்வரி ம்ுன் ஜாமீன் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


முன்னதாக ட்விட்டர் இண்டியா சமீபத்தில் நியமித்த குறைதீர்ப்பு அதிகாரி (grievance officer)  தர்மேந்திரா சதுர்  தனது வேலையை ஒரே வாரத்தில், ராஜினாமா செய்துவிட்டார். இதனால், ட்விட்டர் நிறுவனத்திற்கு மேலும் சிக்கல் அதிகரித்துள்ளது.


மத்திய அரசு சமூக ஊடக தளங்களுக்கு (Social Media) கடிவாளம் போடும் வகையில், கொண்டு வந்த புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் (New IT Rules)  கடந்த மேம் மாதம் 26ம் தேதி புதிய விதிகள் அமலுக்கு வந்தன. புதிய விதிகளுக்கு ட்விட்டரை தவிர அனைத்து சமூக ஊடகங்களும்  இணங்கியுள்ள நிலையில், ட்விட்டர் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது.


ALSO READ | Twitter கொள்கையை விட இந்திய சட்டங்கள் மேலானவை : நாடாளுமன்ற நிலைக்குழு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR