இந்தியாவில் சமூக ஊடக பயனர்கள் எண்ணிக்கையில், அதிகபட்சமாக சுமார் 53 கோடி பேர் வாட்ஸ்அப்பை ( WhatsApp) பயன்படுத்தி வருகின்றனர். அதற்கு அடுத்ததாக கூகுள் நிறுவனத்தை சேர்ந்த யூ- டியூபிற்கு (Youtube) சுமார் 44.8 கோடி பயனர்கள் உள்ளனர். பேஸ்புக்கை (Facebook) சுமார் 41 கோடி பேரும் இன்ஸ்டாகிராமை சுமார் 21 கோடி பேரும் ட்விட்டரை சுமார் 1.75 கோடி பேரும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சமூக ஊடகங்கள் வாயிலாக போலி செய்திகள் பரப்பப்படுவதையும் மற்றும் இந்திய இறையாண்மைக்கு எதிராக சமூக ஊடகங்கள் பயன்படுத்தப்படுவதையும் தடுக்கும் நோக்கில், சமூக ஊடக தளங்களுக்கான புதிய வழிகாட்டு விதிமுறைகளை (New IT Rules) மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தது. இந்த விதிகளை பின்பற்றுவது தொடர்பாக சமூக ஊடகங்களுக்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டது.
மே மாதம் 26ம் தேதி அமலுக்கு வந்துள்ள இந்த புதிய விதிகளுக்கு ட்விட்டரை தவிர அனைத்து சமூக ஊடகங்களும் இணங்கியுள்ள நிலையில், ட்விட்டர் தொடர்ந்து முரண்டு பிடித்து வருகிறது.
ALSO READ | சமூக ஊடகங்கள், டிஜிட்டல் மீடியா, OTT-க்கான புதிய விதிகள்.. முக்கிய தகவல்கள்
புதிய விதிகளுக்கு இணங்க வேண்டிய காலக்கெடு முடிந்ததும் அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. சமூக ஊடக நிறுவனங்களுக்கு முன் என்ன வழிகள் உள்ளன என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். முதல் வழி என்னவென்றால், கொரோனா கொரோனா வைரஸ் நெருக்கடியை மேற்கோள் காட்டி சமூக ஊடக நிறுவனங்கள் காலக்கெடுவை நீட்டிக்க கோரலாம். இரண்டாவது வழி என்னவென்றால், இந்த நிறுவனங்கள் புதிய விதிகளை சொல்லிலும் செயலிலும் பின்பற்றுவதற்கான எழுத்துப்பூர்வ உத்தரவாதத்தை அளிக்கலாம்.
நிறுவனங்கள் கோரிக்கை வைக்கும் பட்சத்தில், அரசாங்கம் காலக்கெடுவை நீட்டிக்க கூடும். மறுபுறம், அரசும் புதிய ஐ.டி சட்டத்தின் கீழ் இந்த நிறுவனங்களின் 'ஊடகம்' நிலையை திரும்பப் பெறலாம். இதற்குப் பிறகு இந்த நிறுவனங்கள், தங்கள் தளத்தில் பதிவிடும் கருத்துக்கள் மற்றும் பதிவுகளுக்கு பொறுப்பேற்கும் நிலை ஏற்படும். அதாவது, குறிப்பிட்ட சமூக ஊடகத்தில் பதிவிடப்படும் போலி செய்திகள் அல்லது இந்திய இறையாண்மைக்கு எதிரான பதிவுகள், வன்முறையை தூண்டும் பதிவுகள் ஆகியவை தொடர்பாக, சம்பந்தப்பட்ட நபருடன் கூடவே, அது பதிவிடப்பட்ட சமூக ஊடக நிறுவனத்தின் மீதும் வழக்கு தொடரலாம்.
சமூக ஊடகங்கள் கடந்த சில ஆண்டுகளாக தவறான வழிகளில் பயன்படுத்தப்படுகின்றன. சமூக ஊடகங்கள் மூலம் வதந்திகளைப் பரப்புதல், ஆட்சேபனைக்குரிய தகவல்களைப் பகிர்வது, நாட்டின் சூழலைக் கெடுப்பது, இதே போன்ற விஷயங்கள் தொடர்ந்து செய்யப்படுகின்றன. இதுபோன்ற வழக்குகள் பல முறை நீதிமன்றத்தையும் எட்டியுள்ளன. அரசு பலமுறை அறிவுறுத்தல்கள் வெளியிட்டுள்ள போதிலும், இந்த விஷயத்தில் இதுவரை சமூக ஊடக நிறுவனங்கள் எந்தவொரு உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ALSO READ | "toolkit" விவகாரம்; ட்விட்டர் இந்தியா நிறுவனத்தில் தில்லி போலீஸார் சோதனை
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR