Twitter India இடைக்கால குறை தீர்க்கும் அதிகாரி ராஜினாமா; அடுத்தது என்ன
சில நாட்களுக்கு முன்னதாக ட்விட்டர் இந்தியா நிறுவனம் தர்மேந்திர சாதுர் என்பவரை இந்திய அளவிலான இடைக்கால குறைதீர் அதிகாரியாக நியமித்தது.
சமூக ஊடக தளங்களுக்கு (Social Media) கடிவாளம் போடும் வகையில், புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தது. அதனை கடைபிடிக்க சமூக ஊடக தளங்களுக்கு 3 மாத கால அவகாசம் வழங்கப்பட்டு கடந்த மேம் மாதம் 26ம் தேதி புதிய விதிகள் அமலுக்கு வந்தன. புதிய விதிகளுக்கு ட்விட்டரை (Twitter) தவிர அனைத்து சமூக ஊடகங்களும் இணங்கியுள்ள நிலையில், ட்விட்டர் தொடர்ந்து முரண்டு பிடித்து வந்தது.
அதனை அடுத்து, புதிய விதிகளை (New IT Rules) பின்பற்ற தவறிய ட்விட்டருக்கு வழங்கப்பட்டு வந்த சட்ட பாதுகாப்பு நீக்கப்பட்டது. அதை அடுத்து, ட்விட்டரில் பதிவிடப்படும், தேச விரோத கருத்துக்கள், பொய் செய்திகள், வன்முறையை தூண்டும் செய்திகள் ஆகியவற்றுக்கு ட்விட்டர் மீது வழக்கு பதியலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
பின்னர், பலகட்ட சர்ச்சைகளுக்கு பிறகு, வேறு வழியின்றி மத்திய அரசின் புதிய விதிகளுக்கு இணங்கி,ட்விட்டர் நிறுவனம் தர்மேந்திர சாதுர் என்பவரை, இந்திய அளவிலான குறைதீர்ப்பு அதிகாரியை நியமித்தது. ஆனால், நியமனம் செய்யப்பட்ட சில நாட்களிலேயே திடீரென ராஜினாமா செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ALSO READ | வீடியோ அழைப்பில் விசாரணைக்கு ஆஜராக தயார்: Twitter India தலைவர்
புதிதாக பதவியேற்ற, தர்மேந்திர சாதுர் ஒரு புகாரை கூட கையாளாமல் திடீரென அவரது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ட்விட்டர் நிறுவனத்தின் வலைத்தளத்தில் இருந்தும் அவருடைய பெயர் நீக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் (Twitter) நிறுவனம், தொடர்ந்து மத்திய அரசுடன் மோதல் போக்கை கையாண்டு வந்த நேரத்தில் குறைதீர்ப்பு அதிகாரி நியமித்ததன் மூலம், புதிய விதிகளை ட்விட்டர் நிறுவனம் கடைபிடிக்கும் என கருதப்பட்ட நிலையில் தற்போது திடீரென குறைதீர்ப்பு அதிகாரி ராஜினாமா செய்திருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இது மேலும் எந்த விதமான சிக்கல்களை ஏற்படுத்தும் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ALSO READ | Twitter கொள்கையை விட இந்திய சட்டங்கள் மேலானவை : நாடாளுமன்ற நிலைக்குழு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR