காஷ்மீர் மாநிலத்தில் பனிச்சரிவுகளில் சிக்கி 10 ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர் 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காஷ்மீர் மாநிலம் குரேஸ் பகுதியில் நேற்று மாலை அடுத்தடுத்து இரண்டு பனிச்சரிவுகள் ஏற்பட்டது. இதில் சிக்கி 10 ராணுவ வீரர்கள் பலியாகினர். பலரது நிலை என்னவானது என்று தெரியவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


குரேஷ் செக்டாரில் நேற்று மாலை பனிச்சரிவு ஏற்பட்டது. இந்த பனிச்சரிவில் ராணுவ வீரர் பலர் சிக்கி கொண்டனர். இதையடுத்து, ராணுவம் முழு வீச்சில் மீட்பு பணியை மேற்கொண்டது. இன்று காலை 3 ராணுவ வீரர்களது உடல் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. பிறகு 7 வீரர்களது உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 


கந்தர்பல் மாவட்டத்தின் சோன்மார்க் பகுதியில் ராணுவ முகாம் பனிச்சரிவில் சிக்கியது. இந்த பனிக்கட்டிகள் ராணுவ முகாமில் விழுந்து முகாமை முற்றிலுமாக மூடின. இதில் முகாமில் இருந்த ராணுவ அதிகாரி உள்பட 11 வீரர்கள் பனிக்குள் புதைந்தனர். இது பற்றிய தகவல் அறிந்ததும் பனிச்சரிவில் சிக்கிய வீரர்களை மீட்கும் பணிகளை மேற்கொண்டனர் . இந்த மீட்புக்குழுவினர் பனிக்கட்டிகளை அகற்றி வீரர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


இந்நிலையில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ராணுவ வீரர்களின் மரண செய்தி தன்னை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியிருப்பதாக பிரதமர் மோடி தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். மேலும் காணாமல் போன வீரர்களை வேகமாக மீட்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.