ஒரிசாவில் மின்னல் தாக்கி இரண்டு மீனவ பெண்கள் பலி!
ஒரிசா மாநிலம் கெந்தப்புரா மாவட்டத்தில் மின்னல் தாக்கி இரண்டு மீனவ பெண்கள் பலியாகியுள்ளனர்!
ஒரிசா மாநிலம் கெந்தப்புரா மாவட்டத்தில் மின்னல் தாக்கி இரண்டு மீனவ பெண்கள் பலியாகியுள்ளனர்!
ஒரிசாவின் ஹூக்கிடோலா தீவில் மீன்பிடிக்க சென்ற மீனவ பெண்மனியர் இருவர் மின்னல் தாக்கி பலியாகியுள்ளனர். இந்த சம்பவமானது மககல்பாடா காவல்நிலைய சராங்கத்திற்கு உட்பட்ட பகுதியில் நிகழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவத்துள்ளனர்.
இச்சம்பவத்தில் பலியானவர்கள் திபாலி மாண்டல்(42) மற்றும் பன்னிட் மாண்டல்(55) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மின்னல் தாக்கிய பின்னர் உடல் கருகிய நிலையில் இவரகளது உடலினை உடன் பயணித்தவர்கள் கொண்டு கரை திரும்பியுள்ளனர். பின்னர் சிகிச்சைகாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்., எனினும் சிகிச்சை பலனின்றி இருவரும் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் இயற்கைக்கு மாறான மரணம் என்ற விதத்தில் வழக்கு பதிந்துள்ளதாகவும் தெரிகிறது.
மின்னல் தாக்கி உயிர் இழந்த இரண்டு பெண்மனியர் குடும்பத்தாருக்கு அரசு நிவாரண நிதியில் இருந்து 4 லட்சம் ரூபாய் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.