சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான தேசிய அறிக்கையின்படி, மூன்று பள்ளி குழந்தைகளில் இருவர் உடல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்படுகிறார்கள் என கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பள்ளிகளில் சிறுவர்கள் கொடூரமான முறையில் தண்டிக்கப்படுவது தற்போது நாடு முழுவதும் ஒரு பொதுவான நிகழ்வாகிவிட்டது. எந்தவொரு விளைவுகளையும் பற்றி கவலைப்படாமல் ஆசிரியர்கள் மாணவர்களை அடிப்பது அல்லது சித்திரவதை செய்வது பற்றி நாம் தினம் ஒரு செய்தியினை கேள்விபட்டு வருகிறோம்.


அந்த வகையில் தற்போது ஆந்திராவின் அனந்தபூரில் ஒரு வினேத நிகழ்வு நடைப்பெற்றுள்ளது. சமூக ஊடங்களை கடும் கோபத்தில் ஆழ்த்திய இந்த சம்பவத்தில் இரண்டு குழந்தைகள் பள்ளி மேசையோடு கட்டி வைக்கப்பட்டிருந்தனர். இச்சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் தெரிவிக்கையில்., குற்றம்சாட்டப்பட்ட மாணவர்களில் ஒருவன் காதல் கடிதம் எழுதியதாகவும், மற்றொருவன் அந்த கடிதத்தை திருடியதாகவும் கூறி தண்டிக்கப்பட்டுள்ளனர். 


கடித திருட்டு விவகாரத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட, இவகாரம் தலைமை ஆசிரியர் காதுகள் வரை எட்டியுள்ளது. இதனைத்தொடர்ந்து மாணவர்களுக்கு இந்த வினேத தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.


இந்த புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவ, பள்ளி நிர்வாகத்தின் மீது நெட்டீசன்கள் தங்கள் தாக்குதல்களை தொடர்ந்துள்ளனர். இதுகுறித்து சிறவர் நல செயற்பாட்டாளர் அச்சுயதா ராவ் மாணவர்களின் மீது இவ்வாறு தாக்குதல்கள் நடத்தப்படவது இது முதல் முறை அல்ல., மாவர்களும் அத்தகைய குற்றங்கள் செய்வது முதல்முறை அல்ல. ஆனால் இந்த சிறு குற்றத்திற்காக மாணர்களை இவ்வாறு கொடூரமாக தண்டிப்பது ஏற்புடையது அல்ல, எனவும் தெரிவித்துள்ளார்.


எனினும் இச்சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டுகளை பள்ளி தலைமை ஆசிரியர் மறுத்துள்ளார். மேலும், மாணவர்களை அவர்களது பெற்றோர்கள் தான் இவ்வாறு தண்டித்தனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். என்றபோதிலும் ஊள்ளூர் ஊடகங்களின் தகவல்கள் படி குறித்த அந்த பள்ளியில் மாணவர்களுக்கு இவ்வாறான தண்டனை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.