ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காமில் இரண்டு தீவிரவாதிகளை பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம்  குல்காம் மாவட்டத்தில் உள்ள கோபால்போரா பகுதியில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் அப்பகுதியை தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்த ஆயத்தமாகி வருவதாகவும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, மாநில போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு படையினர் கோபால்போரா பகுதியை சுற்றி வளைத்தனர். பாதுகாப்பு படையினரை பார்த்த தீவிரவாதிகள் தாக்குதலை தொடங்கினர்.


இதனால் பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடவடிக்கையில் இறங்கினர். ஒரு மணி நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையின் முடிவில், இரு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்கள் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று ராணுவ உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர். தேடுதல் வேட்டை தொடரும் நிலையில் குல்காமில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.



கடந்த சனிக்கிழமை, புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் மோதல் ஏற்பட்டதில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 130 போராளி CRPF 55 ராஷ்ட்ரிய ரைஃபிள் (RR) மற்றும் பன்வமாவிலுள்ள பன்ஜாம் கிராமத்தில் உள்ள பன்ஜாம் கிராமத்தில் சிறப்பு நடவடிக்கை குழு (SOG) ஆகிய பயங்கரவாதிகள் மற்றும் துருப்புக்கள் இடையே மோதல் ஏற்பட்டது. கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் ஹிஸ்புல் முஜாஹிதீன் மக்களே. அவர்களில் ஒருவரான ஷூக்கட் அஹ்மத் தார் என்ற ஹிஸ்புல் முஜாஹிதீன் தளபதியாக அடையாளம் காணப்பட்டார், இவர் ஒரு இராணுவ ஜவான் ஔரங்கசீப் கொல்லப்பட்டார். புல்வாமாவில் பன்ஸ்காம் குடியிருப்பாளராக ஷோகாட் இருந்தார்.