காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் 2 தீவிரவாதிகளை சுட்டுக்கொலை
![காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் 2 தீவிரவாதிகளை சுட்டுக்கொலை காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் 2 தீவிரவாதிகளை சுட்டுக்கொலை](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2017/07/30/117400-612965-585277-army-zee.jpg?itok=baHzCbum)
ஜம்மு - காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் உள்ள தாகாப் பகுதியில் வீடு ஒன்றில் 2 தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
தொடர்ந்து, ராணுவத்தினரும், போலீசாரும் அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். இதனை பார்த்த தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர்.
பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த துப்பக்கிசூடில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடந்து வருகிறது