மத்திய அரசின் விவசாயிகளுக்கான நிதியுதவி 2 ஆயிரம் ரூபாய் பெற உடனே இதை செய்யவும்
PM Kisan Yojana: விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக 6,000 ரூபாயை செலுத்தும் பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் 12வது தவணைக்கான காலக்கெடு நெருங்குகிறது
PM Kisan KYC: விவசாயிகளின் நலனுக்காக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விவசாயிகளின் நலனுக்காக பாடுபடும் மத்திய மாநில அரசுகள் விவசாயிகளுக்கு நிதியுதவியும் வழங்குகுகின்றன. அதில் மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் யோஜனா என்ற திட்டம் விவசாயிகளுக்கு பலனுள்ளதாக இருக்கிறது. இத்திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக 6,000 ரூபாயை மத்திய அரசு அனுப்புகிறது. இந்த 6 ஆயிரம் ரூபாய் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை என மூன்று தவணைகளாக தலா 2 ஆயிரம் ரூபாய் விநியோகிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் பயனாளிகளாக இருக்கும் கோடிக்கணக்கான விவசாயிகள் அதற்கு சில முக்கிய விஷயங்களை செய்ய வேண்டும்.
அதில் ஒரு சிறிய மற்றும் சுலபமான வேலையை செய்யாவிட்டால் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய உதவித்தொகை கிடைக்காமல் போகலாம். பிரதம மந்திரி கிசான் யோஜனாவின் பயனாளிகளுக்கு இந்த மாதம் (2022 ஜூலை) 31ம் தேதிக்குள் ஒரு தவணை பணம் செலுத்தப்பட வேண்டும். இறுதி நாளுக்கு இன்னும் 15 நாட்கள் மட்டுமே எஞ்சி உள்ள நிலையில், விவசாயிகள் இந்த வேலையை விரைவில் முடிக்க வேண்டும்.
மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி சின்னசேலம் நயினார்பாளையத்தில் ஜூலை 31 வரை 144 தடை உத்தரவு
தகுதியான விவசாயிகள் பிரதம மந்திரி கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் KYC தகவல்களை புதுப்பிக்க வேண்டும். இந்த திட்டத்தின் 11வது தவணை கடந்த மே 31 தேதி அன்று விநியோகிக்கப்பட்டது. அதற்கு அடுத்த தவணை அதாவது 12வது தவணையை எந்த இடையூறும் இன்றி பெற வேண்டுமானால், கேஒய்சி புதுப்பிக்கப்பட வேண்டும். இல்லையெனில் 12வது தவணை பெறுவதில் சிக்கல் ஏற்படலாம்.
கேஒய்சி எனும் தகவல்களை புதுப்பிக்க 31 ஜூலை 2022 வரை கால அவகாசம் உள்ளது. ஆனால், அதற்கு முன்னதாக தகவல்களை புதுப்பிக்காவிட்டால், விவசாயிகள்க்கு, பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் 12ம் தவணையாக 2000 ரூபாய் கிடைக்காது. மோசடிகளைத் தடுக்க KYC செயல்முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | SBI அற்புதமான சலுகை, ஷாப்பிங் செய்து 70% தள்ளுபடி பெறுங்கள்
ஆன்லைனில் eKYC புதுப்பிப்பது எப்படி?
பிரதம கிசானின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
* வலது பக்கத்தில் இருக்கும் இ-கேஒய்சி விருப்பத்தை கிளிக் செய்யவும்.
* ஆதார் அட்டை எண், கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு தேடலைக் கிளிக் செய்யவும்.
* ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிடவும்.
* ஓடிபி பெறவும் என்ற தெரிவை கிளிக் செய்யவும் உங்களுக்கு கிடைத்த ஓடிபி தரவை உள்ளிடவும்.
இதற்குப் பிறகு, உங்கள் தகவல்கள் புதுப்பிக்கப்பட்டு, eKYC செயல்முறை நிறைவடையும். தரவுகள் சரியாக இல்லை என்றால், அது தொடர்பான தகவலும் வந்துவிடும். பிறகு, ஆதார் சேவா கேந்திராவுக்குச் சென்று சரி செய்து கொள்ளலாம்.
மேலும் படிக்க | PF தொகையை மாற்றணுமா: வீட்டில் இருந்தபடியே செய்யலாம், எளிய செயல்முறை இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR