சபரிமலைக்கு செல்ல முயன்ற மேலும் 1 பெண் தடுத்து நிறுத்தம்....
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல முயன்ற ஆந்திராவை சேர்ந்த 2 பெண்கள் திரும்பி சென்றனர்....
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல முயன்ற ஆந்திராவை சேர்ந்த 2 பெண்கள் திரும்பி சென்றனர்....
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து இம்மாதம் 17 ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலின் நடை மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கிற்காக திறக்கப்பட்டது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி, கோவிலுக்குள் செல்ல இரண்டு நாட்களாக பெண்கள் முயன்று வருகின்றார்கள். ஆனாலும், அவர்களின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்து வருகின்றது. இந்நிலையில் சமீபத்தில் ஆந்திராவைச் சேர்ந்த பெண் ஊடகவியலாளர் கவிதா, மற்றும் கேரளத்தை சேந்த மாடல் மற்றும் சமூக சிந்தனையாளருமான ரெஹானா பாத்திமா ஆகியோர் சபரிமலையில் ஸ்வாமி தரிசனத்திற்கு முயன்றனர் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதை தொடர்ந்து, இன்று காலை சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல முயன்ற ஆந்திராவை சேர்ந்த 2 பெண்கள் திரும்பி சென்றனர். பக்தர்களின் எதிர்ப்பால் 50 வயது பூர்த்தியாகாத பெண்கள் சன்னிதானம் செல்லாமல் பம்பையிலிருந்து திரும்பினர். இந்நிலையில், தற்போது மீண்டும் சபரிமலை ஐயப்பன் கோயிலில் வழிபட சென்ற பெண் நடைப்பந்தல் பகுதியில் தடுத்து நிறுத்தம்.
நேற்று, மதுரையை செந்த ஒன்பது வயது சிறுமி மற்றும் 50 வயது பெண்ணும் தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது....!