சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து 18 ஆம் படியின்கீழ் அர்ச்சகர்கள் நடத்தும் தர்ணா போராட்டத்துக்கு தேவசம் போர்டு உறுப்பினர்களும் ஆதரவு....! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதி மன்ற தீர்ப்பையடுத்து, அங்கு செல்ல பல பெண்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பெண்களை கோயிலுக்கு அனுமதிக்கக் கூடாது என இன்னொரு புறம் எதிர்ப்பும் தீவிரமாகியிருக்கிறது. 


இதற்கிடையே பெண் பத்திரிக்கையாளர் கவிதா என்பவரும், ரெஹானா என்ற சமூக ஆர்வலரும் போலீஸ் பாதுகாப்புடன் ஐய்யப்பன் கோயிலுக்கு சென்றனர். அப்போது போராட்டக்காரர்களால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். பெண்களை கோயிலுக்குள்ளே விட்டால், ஐயப்பனின் புனிதம் கெட்டுவிடும் என்ற காரணத்தைக் கூறும் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே அவர்கள் 18-ம் படியில் கால் வைத்தால், கோயிலை இழுத்து மூடுமாறு பந்தள மன்னர் உத்தரவிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. 



இதையடுத்து, பலத்த பாதுகாப்போடு சென்ற இரண்டு பெண்களையும் சபரிமலை சந்நிதானத்தின், கீழ்பகுதியில் உள்ள நடைப்பகுதியில் திரளாக திரண்ட பக்தர்கள் அவர்களை தடுத்தி நிறுத்தினர். இதனையடுத்து போலீஸார் பக்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், பக்தர்கள் சரண கோஷம் எழுப்பியவாறு பெண்களை அனுமதிக்க முடியாது என போராட்டம் நடத்தினர். இதனையடுத்து போலீஸார் அந்தப் பெண்களை பாதுகாப்பாக ஒரு இடத்தில் தங்க வைத்தனர். ஆனால், ஒரு பக்கம் பக்தர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இந்த விவகாரத்தில் தலையிட்ட கேரள அரசு, இந்த இரு பெண்களையும் திருப்பி அனுப்ப போலீஸாருக்கு உத்தரவிட்டது. 



சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து 18ஆம் படியின்கீழ் அர்ச்சகர்கள் நடத்தும் தர்ணா போராட்டத்துக்கு தேவசம் போர்டு உறுப்பினர்களும் ஆதரவு அளித்து, அந்த இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, சபரிமலை சன்னிதானத்துக்குள் செல்ல முயன்ற இரு பெண்களும் பம்பைக்கு திருப்பி அனுப்பப்படுகின்றனர். 


சபரிமலையில் காவல்துறையினர் பிரச்சினையை ஏற்படுத்தமாட்டார்கள். பக்தர்களுடனான மோதல் எங்களுக்கு தேவையில்லை, நாங்கள் சட்டத்தை பின்பற்றுகிறோம் என ஐ.ஜி.ஸ்ரீஜித் கூறி உள்ளார். 


ஆந்திரம் மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த மோஜோ தொலைக்காட்சியில் செய்தியாளராக கவிதா பணியாற்றி வருகிறார். செய்தியாளர் கவிதாவுடன் செல்வது பெண்ணியவாதி ரஹானா பாத்திமா என ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்து உள்ளது.


சபரிமலை நிலவரம் குறித்து கேரள டிஜிபி லோக்நாத் பகராவிடம் கேட்டறிந்தார் கேரள ஆளுநர் சதாசிவம்....!