இந்தியாவில் 23 அங்கீகாரமற்ற போலி பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருவதாக பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக உத்தரபிரதேசம், டெல்லியில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) செயலாளர் ரஜினிஷ் ஜெயின் இதுகுறித்து தெரிவிக்கையில்., 


நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளை மீறி அங்கீகாரமற்ற பல்கலைக்கழகங்கள் போலியாக செயல்பட்டு வருகின்றன. இப்போதைக்கு நாட்டில் 23 பல்கலைக்கழகங்கள் அங்கீகாரம் இல்லாமல் பெயரளவுக்கு சுயமாக வடிவமைத்துக் கொண்டு போலியாக செயல்படுகின்றன. மாணவர்கள் இந்த பல்கலைக்கழகங்களில் சேர வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.


இந்த 23 பல்கலைக்கழகங்களில் அதிகபட்சமாக உத்தரபிரதேச மாநிலத்தில் 8 பல்கலைக்கழகங்கள் உள்ளன. இதில் ஒரு பல்கலைக்கழகம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. அடுத்தபடியாக டெல்லியில் 7 பல்கலைக்கழகங்களும், மேற்குவங்காளம் மற்றும் ஒடிசாவில் தலா 2 பல்கலைக்கழகங்களும் உள்ளன.


கேரளா, கர்நாடகா, மராட்டியம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒரு அங்கீகாரமற்ற பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகங்களின் பெயர்களையும் UGC வெளியிட்டுள்ளது.


இந்த பட்டியலில் புதுச்சேரியில் உள்ள ஸ்ரீபோதி அகாடமி ஆப் ஹையர் எஜுகேஷன், கர்நாடகாவில் பாதகாவி சர்க்கார் வேர்ல்டு ஓபன் யூனிவர்சிட்டி எஜுகேஷன் சொசைட்டி, கேரளாவில் செயின்ட் ஜான்ஸ் யூனிவர்சிட்டி, மராட்டியத்தில் ராஜா அரபிக் யூனிவர்சிட்டி ஆகியவை இடம்பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.


23 போலி பல்கலைக்கழகங்களின் பெயர்கள்:


--புதுடெல்லி--


1. கமர்ஷியல் யுனிவர்சிட்டி லிமிடெட், தரியகஞ்ச், டெல்லி
2. ஐக்கிய நாடுகளின் பல்கலைக்கழகம், டெல்லி
3. தொழிற்கல்வி பல்கலைக்கழகம், டெல்லி
4. ஏடிஆர்-சென்ட்ரிக் ஜூரிடிகல் பல்கலைக்கழகம், ஏடிஆர் ஹவுஸ், 8 ஜே, கோபாலா டவர், 25 ராஜேந்திர பிளேஸ், புது தில்லி -110008
5. இந்திய அறிவியல் மற்றும் பொறியியல் நிறுவனம், புது தில்லி
6. சுய வேலைவாய்ப்புக்கான விஸ்வகர்மா திறந்த பல்கலைக்கழகம், இந்தியா ரோஸ்கர் சேவாசதன், 672, சஞ்சய் என்க்ளேவ், எதிர். ஜி.டி.கே டிபோட், புது தில்லி -110033
7. ஆத்யாத்மிக் விஸ்வவித்யாலயா (ஸ்பிரிட்சுவல் பல்கலைக்கழகம்), 351-352, கட்டம் -1, பிளாக்-ஏ, விஜய் விஹார், ரிதலா, ரோகிணி, டெல்லி -110085


--கர்நாடகா--


8. படகன்வி சர்க்கார் உலக திறந்த பல்கலைக்கழக கல்விச் சங்கம், கோகக், பெல்காம் (கர்நாடகா), கேரளா
9. செயின்ட் ஜான்ஸ் பல்கலைக்கழகம், கிஷனாட்டம், கேரளா


--மகாராஷ்டிரா--


10. ராஜா அரபு பல்கலைக்கழகம், நாக்பூர்.


--மேற்கு வங்கம்--


11. இந்திய மாற்று மருத்துவ நிறுவனம், 80, ச ow ரிங்கீ சாலை, கொல்கத்தா -20
12. மாற்று மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், 8-ஏ, டயமண்ட் ஹார்பர் ரோடு பில்டெக் இன் 2 வது மாடி, குர்புகூர், கொல்கத்தா -700063


--உத்தரபிரதேசம்--


13. வாரணசேய சமஸ்கிருதம் விஸ்வவித்யாலயா, வாரணாசி (உ.பி.) / ஜெகத்புரி, டெல்லி
14. மஹிலா கிராம் வித்யாபித் / விஸ்வத்யாலயா, (மகளிர்) பல்கலைக்கழகம், பிரயாகராஜ், (உ.பி.)
15. காந்தி இந்தி வித்யாபித், பிரயாகராஜ், உத்தரபிரதேசம்
16. தேசிய காம்ப்ளக்ஸ் ஹோமியோபதி பல்கலைக்கழகம், கான்பூர், உத்தரபிரதேசம்
17. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பல்கலைக்கழகம் (திறந்த பல்கலைக்கழகம்), அச்சல்தால், அலிகார், (உ.பி.)
18. உத்தரபிரதேசம் விஸ்வவித்யாலயா, கோஷி கலான், மதுரா (உ.பி.)
19. மஹாராணா பார்த்தப் ஷிக்ஷா நிகேதன் விஸ்வவித்யாலயா, பிரதாப்கர் (உ.பி.)
20. இந்திரபிரஸ்தா சிக்ஷா பரிஷத், நிறுவன பகுதி, கோஹோடா, மாகான்பூர், நொய்டா கட்டம் II, (உ.பி.)


--ஒடிசா--


21. நபபாரத் சிக்ஷா பரிஷத், அனுபூர்ண பவன்
22. வடக்கு ஒரிசா வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், பல்கலைக்கழக சாலை பாரிபாடா


--புதுச்சேரி--


23. ஸ்ரீ போதி உயர் கல்வி அகாடமி, திலாஸ்பேட், வஜுதாவூர் சாலை, புதுச்சேரி