2021 ஆம் ஆண்டில் G7 உச்சி மாநாட்டிற்கு தலைமை தாங்கும் பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் தென் கொரியாவைச் சேர்ந்த தலைவர்களை  சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளது. ஜி7 உறுப்பு நாடுகள் சுழற்சி முறையில், தலைமை வகிக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜுன் மாதம் நடைபெற உள்ள இந்த உச்சி மாநாடு, ஜோ பைடன் (Joe Biden) அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின்னர் நடக்கும் முதல் G7 உச்சிமாநாடாக இது இருக்கும்.


கொரோனா வைரஸ் (Corona Virus) தொற்றுநோயால்  சென்ற ஆண்டு நடைபெறுவதாக இருந்து உச்சி மாநாட்டை,  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்  ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.


அழைப்பு விடுக்கப்பட்ட தலைவர்கள் தங்கள் வருகையை இன்னும் உறுதிப்படுத்தவில்லை, ஆனால் உச்சிமாநாடு ஜூன் 11-13 அன்று  இங்கிலாந்தின் தென்மேற்கு பகுதியான கார்ன்வாலில் உள்ள கடலோர நகரமான கார்பிஸ் விரிகுடாவில் நடைபெற உள்ளது.


கோவிட் -19 (Covid-!9) மற்றும் காலநிலை மாற்றத்திற்கான உலகளாவிய நடவடிக்கை ஆகியவை குறித்து முக்கியமாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய ஏழு உறுப்பு நாடுகளின் தலைவர்களும் அமைச்சர்களும் சமீபத்திய மாதங்களில் சந்தித்துள்ளனர்.


தொற்றுநோயிலிருந்து உலகம் மீள்வதற்கு உச்சிமாநாடு ஒரு ஊக்க சக்தியாக இருக்கும் என பிரிட்டன் பிரதமர் அலுவலகம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. 


பிப்ரவரியில் ஐ.நா. (UN) பாதுகாப்புக் சபையின் தலை பொறுப்பை பிரிட்டன்  ஏற்க உள்ளது. மேலும் பிரெக்சிட்டுக்குப் பிந்தைய புதிய பாதையில் இங்கிலாந்து தொடக்கியுள்ள நிலையில், இந்த மாநாடு ஒரு ஊக்க சக்தியாக இருக்கும் என பிரிட்டன் நம்புகிறது.


ALSO READ | வடகொரியா தனது பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பு மூலம் அமெரிக்காவை எச்சரிக்கிறதா..!!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR