புதுடில்லி: அயோத்தியின் ராம் ஜன்மபூமி - பாப்ரி மஸ்ஜித் நிலப்பிரச்சனை (Ayodhya Case) குறித்த வரலாற்றுத் தீர்ப்பை அடுத்து, முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக தலைவருமான உமா பாரதி (Uma Bharti), தனது கட்சியின் முதல் மூத்த தலைவரான லால் கிருஷ்ணா அத்வானி (Lal Krishna Advani) அவருக்கு மரியாதை செலுத்த விரும்புகிறேன் எனக் கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னாள் முதல்வரான உமா பாரதி தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் இமயமலை, உத்தராகண்ட் கங்கைக் கரையின் வழியாக டெல்லியை அடைந்தேன். இன்று பாஜக அதிகாரிகளின் கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது. டெல்லிக்கு வரும் வழியில், அயோத்தி தீர்ப்பு குறித்து கேள்வி பட்டவுடன், நான் முதலில் அத்வானிஜியின் வீட்டுக்கு செல்கிறேன். அவரிடம் தலை வணங்கி ஆசிர்வாதம் பெற வந்தேன். அவர் எனக்கு கற்றுக்கொடுத்த பாடங்களைத் தொடருவேன்.


ராமருக்கு கோயில் கட்ட வேண்டும் என கொள்கையில் ஈடுபாடுள்ள பாஜக தலைவர் தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக ட்வீட் செய்து, இந்திய அரசியலின் முக்கிய தலைவரான அத்வானி, போலி மதச்சார்பின்மை vs தேசியவாதம் என்ற விவாதத்தக்கு எதிராக குரல் எழுப்பியவர். அங்கிருந்து தான் அயோத்தி இயக்கம் முன்னோக்கி நகர்ந்தது என்று கூறியுள்ளனர்.


மோடி அரசாங்கத்தில் கங்கை அமைச்சகத்தின் பொறுப்பை ஏற்றுக்கொண்ட உமா பாரதி, "இந்திய அரசியலில் போலி மதச்சார்பின்மையை அசைத்த முதல் தலைவர் அத்வானி" என்று ட்வீட் செய்துள்ளார். அவர் மூலமாக தான், இன்று பாஜக-வால் ராமர் கோயில் கோரிக்கை நிறைவேறி உள்ளது. பொதுமக்களும் சாதி, மதம் மற்றும் வர்க்க வேறுபாட்டை மறந்து மோடி ஜியை ஆதரித்தனர்'' எனக் கூறியுள்ளார்.


 



அயோத்தியா வழக்கின் தீர்ப்பினை தலைமை நீதிபதி ரன்சன் கோகாய் தலைமையிலான அரசியலமைப்பு பென்ச் இன்று அறிவித்தது. இந்த தீர்ப்பில் சர்ச்கைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம். இதற்காக 3 மாதங்களுக்குள் மத்திய அரசு ஒரு அறக்கட்டளையை ஏற்படுத்த வேண்டும். அதேபோல முஸ்லிம்கள் மசூதி கட்டுவதற்கு வேறு இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.