ரூ.90 லட்சத்தை எடுக்க முடியாமல் உயிரிழந்த பி.எம்.சி. வங்கி வாடிக்கையாளர் ஒருவர் இருதய நோயால் பாதிக்கப்பட்டு பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட, பிஎம்சி வங்கியில் சுமார் 21 ஆயிரம் போலி கணக்குகள் மூலமாக 4 ஆயிரத்து 355 கோடி ரூபாய் முறைகேடு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பான மும்பை பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் விசாரணையில், பி.எம்.சி வங்கியின் முன்னாள் தலைவர் வர்யம் சிங், அமிர்தசரசில், 400 கோடி ரூபாய் மதிப்புள்ள நட்சத்திர விடுதி ஒன்றை வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது.


இதுதவிர, ஹரியானா, மற்றும் இமாச்சல் பிரதேசத்திலும், நிலங்கள் உள்ளிட்ட சொத்துகளை, வர்யம் சிங் வாங்கி குவித்திருப்பதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில், மும்பையில் உள்ள பி.எம்.சி. வங்கியில் தனது பெயரில் உள்ள 90 லட்சம் ரூபாயை எடுக்க முடியாமல் போராடிய ஜெட் ஏர்வேசின் முன்னாள் ஊழியர் மாரடைப்பால் உயிரிழந்தார்.


வங்கி மோசடி குறித்த விசாரணை நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், PMC வங்கி வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே பணம் எடுக்க முடியும் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதைக் கண்டித்து வாடிக்கையாளர்கள் போராடி வருகின்றனர். அந்த வாடிக்கையாளர்களில் ஒருவரான மும்பை ஒசிவாராவைச் சேர்ந்த ஜெட் ஏர்வேசின் முன்னாள் ஊழியர் சஞ்சய் குலாட்டி, பி.எம்.சி. வங்கிக்கு எதிரான நேற்றைய போராட்டத்தில் பங்கேற்றார். போராட்டத்தை முடித்து விட்டு வீடு திரும்புகையில் மாரடைப்பால் அவர் உயிரிழந்தார்.


இதுகுறித்து ஜீ மீடியாவிற்கு கிடைத்த தகவலின் படி, PMC வங்கி அதிகாரிகள் வாடிக்கையாளர்களின் பணத்தைப் பயன்படுத்தி தனியார் சொத்துக்களை உருவாக்க அப்பட்டமாக விதிகளை மீறினர். எச்.டி.ஐ.எல் விளம்பரதாரர்களுடன் இணக்கமாக பி.எம்.சி வங்கியில் இந்த மோசடி மூத்த அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.


நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் திங்களன்று பி.எம்.சி வங்கி வாடிக்கையாளர்கள் எந்த இழப்பையும் சந்திக்க மாட்டார்கள் என உறுதியளித்தார். ஏனெனில், ரிசர்வ் வங்கியின் ஆர்வத்தை மனதில் வைத்துக் கொள்ளவும், தற்போதைய நெருக்கடியை விரைவில் தீர்க்கவும் மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளது.