கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிழலுலக தாதா சோட்டா ராஜன் குணமானார்: AIIMS
பல சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட வந்த சோட்டா ராஜன், இந்தியாவில் இருந்து தப்பி ஓடி, 1988 ஆம் ஆண்டு துபாய்க்கு சென்று விட்டார். அங்கிருந்து கொண்டே, இந்தியாவில் சமூக விரீத செயல்களை, ரிமீட் கண்ட்ரோல் மூலம் நடத்தி வந்தார்.
நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராஹிமின் கூட்டாளி சோட்டா ராஜனுக்கு சென்ற ஏப்ரல் 26ம் தேதி கொரோனா உறுதியானது. இதையடுத்து அவர் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இறந்ததாக செய்திகள் மே 7ம் தேதி, வெளியானது. ஆனால், செய்தி வெளியான சிறிது நேரத்திலேயே, அவர் உயிருடன் தான் இருக்கிறார் என AIIMS மருத்துவர்கள் விளக்கம் அளித்தனர்.
இந்நிலையில், இன்று, சோட்டா ராஜன் கொரோனாவிலிருந்து குணமாகி விட்டதாக, எய்ம்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பல சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட வந்த சோட்டா ராஜன், இந்தியாவில் இருந்து தப்பி ஓடி, 1988 ஆம் ஆண்டு துபாய்க்கு சென்று விட்டார். அங்கிருந்து கொண்டே, இந்தியாவில் சமூக விரீத செயல்களை, ரிமீட் கண்ட்ரோல் மூலம் நடத்தி வந்தார்.
மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்தவர் தான் சோட்டா ராஜன். பல நாட்களாக தப்பி வந்த சோட்டா ராஜன் 2015 ஆம் ஆண்டு இந்தோனேஷியாவில் பாலி தீவில் பதுங்கியிருந்த போது கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.
ALSO READ | நிழலுலக தாதா சோட்டா ராஜன் உயிருடன் தான் இருக்கிறார்: AIIMS
பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டு சோட்டா ராஜனுக்கு கோவிட் -19 (COVID-19) தொற்று உறுதியானதை அடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதால், வழக்கு விசாரணைக்காக வீடியோ கான்பரென்சிங் மூலம் ராஜனை ஆஜர்படுத்த முடியாது என்று திஹாரில் உள்ள உதவி ஜெயிலர் அமர்வு நீதிமன்றத்திற்கு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இறந்தவர் நீரிழிவு, இதய பிரச்சினை, சிறுநீரக செயலிழப்பு, குடலிறக்கம் மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பல நோய்களால் அவதிப்பட்டு வந்த நிலையில், அவருக்கு கொரோனா தொற்றும் ஏற்பட்டுள்ளது.
ALSO READ | மத்திய அரசிடம் இருந்து முழு ஒத்துழைப்பு கிடைக்கிறது: SII அதார் பூனவல்லா
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR