புனேவில் உள்ள, கோவிஷீல்ட் கொரொனா தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான அதார் பூனவல்லாவுக்கு (Adar Poonawalla) பல்வேறு தரப்பிடம் இருந்து அச்சுறுத்தல்கள் வருவதாகவும், அதனால், அவருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மத்திய அரசிடம் முன்னதாக கோரிக்கை வைக்கப்பட்டது. இதை அடுத்து ”Y" பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது.
தற்போது லண்டனில் உள்ள சீரம் நிறுவன தலைவர், இந்தியாவில் பலரிடம் இருந்து மிரட்டல்கள் வருகிறது என்பதால், சில காலம் லண்டனிலேயே தங்கி இருக்க முடிவு செய்துள்ளேன் என சில நாட்களுக்கு முன் கூறியது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸுக்கான (Corona Virus) கோவிஷீல்ட் (Covishield) தடுப்பு மருந்தை தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (SII), பிற நாடுகளில் தடுப்பூசி உற்பத்தியை தொடங்க திட்டமிட்டுள்ளதாக நேற்று செய்தி வெளியானது. தடுப்பூசிக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், அதன் சப்ளையை அதிகரிக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்தது.
ALSO READ | கோவிஷீல்டு தடுப்பூசியை வெளிநாடுகளில் தயாரிக்க திட்டம்: SII தலைவர் ஆதர் பூனவல்லா
கடந்த வாரம் சீரம் நிறுவனம் தனது மாத உற்பத்தியை ஜூலை மாதத்திற்குள் 100 மில்லியன் என்ற அளவிற்கு அதிகரிக்கும் என்று கூறியது.
இந்நிலையில், இந்தியா ஜூலை வரை கோவிட் -19 தடுப்பூசி பற்றாக்குறையை எதிர்கொள்ளும் என்று SII தலைவர் ஆதர் பூனவல்லா தெரிவித்ததாகவும் செய்தி வெளியானது.
பல்வேறு வகையான தகவல்கள் வரும் நிலையில், அனைத்தையும் தெளிவுபடுத்தும் வகையில், ட்விட்டரில் ஒரு அறிக்கையை வெளியிட்ட பூனவல்லா, "எனது கருத்துக்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கலாம் என்பதால் நான் விஷயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன். முதலாவதாக, தடுப்பூசி உற்பத்தி என்பது ஒரு சிறப்பு செயல்முறையை கொண்டது. எனவே ஒரே இரவில் உற்பத்தியை அதிகரிக்க முடியாது. இந்தியாவின் மிகப்பெரிய மக்கள் தொகைக்கு தேவையான தடுப்பூசியை தயாரிப்பது அவ்வளவு எளிதல்ல. மிகவும் முன்னேறிய நாடுகளும் நிறுவனங்களும் கூட போராடுகின்றன என்பதை புரிந்து கொள்ள வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.
மேலும், நாங்கள் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் மத்திய அரசுடன் நெருக்கமாக பணியாற்றி வருவதோடு, அரசு எல்லா வகையான ஆதரவையும் எங்களுக்கு கிடைத்துள்ளது. இன்றைய நிலவரப்படி, மொத்தம் 26 கோடி டோஸ்களுக்கான ஆர்டர்களைப் பெற்றுள்ளோம். மத்திய அரசிடம், 10 சதவிகித முன் பணமாக ரூ.1732.50 கிடைத்துள்ளது. அவற்றில் 15 கோடிக்கு மேலான டோஸ்களை வழங்கினோம். அடுத்த சில மாதங்களில் 11 கோடி டோஸ்கள் வழங்கப்படும். கடைசியாக, தடுப்பூசி விரைவாக கிடைக்க வேண்டும் என்று எல்லோரும் விரும்புகிறார்கள். அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி கிடைக்க, நாங்கள் எல்லா முயற்சிகளையும் செய்து வருகிறோம். COVID-19 க்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தை தீர்க்க நாங்கள் இன்னும் கடினமாக உழைப்போம். " என தெரிவித்துள்ளார்.
ALSO READ | இந்தியா ஜூலை வரை கோவிட் -19 தடுப்பூசி பற்றாக்குறையை எதிர்கொள்ளலாம்: SII
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR