காவல்துறை அதிகாரி போல் வேடமணிந்து மர்ம நபர் கொள்ளை!
பஞ்சாப்பில் காவல்துறை அதிகாரி போல் வேடமணிந்து மர்ம நபர் ஒருவர் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!
பஞ்சாப்: பஞ்சாப்பில் காவல்துறை அதிகாரி போல் வேடமணிந்து மர்ம நபர் ஒருவர் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!
பஞ்சாப் மாநிலத்தின் லுதியானாவின் ஆசாத் நகரில், காவல் துறை அதிகாரி போல் வேடமணிந்து வெஸ்டர்ன் யூனியன் கடை ஒன்றில் சுமார் ரூ. 4 லட்சம் கொள்ளை அடித்துள்ளார்.
கொள்ளையடித்த நபர் பற்றிய தகவல்கள் மர்மமாகவே உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பஞ்சாப் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.