Union Budget 2022: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை பொது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். நான்காவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முதல் பெண் நிதி அமைச்சர் என்ற பெருமையையும் பெறுகிறார். கொரோனா தொற்றுநோய் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள பொருளாதாரத்தை vஅளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வது நிதியமைச்சரின் முன் உள்ள மிகப்பெரிய சவால். இது தவிர, வேலையில்லா திண்டாட்டத்தை குறைப்பதுடன், விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களின் வருமானத்தை அதிகரிப்பது உள்ளிட்ட பல சவால்கள் அவர் முன் உள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சவால்  1: வேலையின்மையை குறைத்தல்


கொரோனா தொற்றுக்குப் பிறகு வேலையின்மை விகிதம் வேகமாக அதிகரித்துள்ளது. நாட்டில் வேலையின்மை விகிதம் தற்போது 6.9% ஆக உள்ளது எனவும், நகர்ப்புற வேலையின்மை விகிதம் 8.4% ஆகவும், கிராமப்புற வேலையின்மை விகிதம் 6.2% ஆகவும் உள்ளது என என CMIE புள்ளி விபரம் கூறுகிறது.  வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைப்பது நிதியமைச்சரின் முன் பெரும் சவாலாக உள்ளது. இதற்காக பட்ஜெட்டில் MNREGA  திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் தொகையை அதிகரிப்பதுடன், நகர்ப்புற வேலையின்மை பிரச்சனையை தீர்க்கும் வகையிலான அறிவிப்புகள் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.


ALSO READ | Work From Home VS Budget: வீட்டில் இருந்து வேலை செய்பவர்களுக்கு நல்ல செய்தி! புதிய அலவன்ஸ்?!


சவால் 2: பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துதல்


நாட்டில் சில்லறை பணவீக்கம் 5.59 சதவீதமாக அதிகரித்துள்ளது. மொத்த விற்பனை பணவீக்கம் வரலாறு காணாத அளவில் 13.56 சதவீதமாக உள்ளது. பணவீக்கம் அதிகரித்து வருவதால், மக்களின் வாங்கும் திறன் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், செலவினங்களை அதிகரிக்கும் நடவடிக்கைகள் குறித்து நிதியமைச்சர் வலியுறுத்த வேண்டிய தேவை உள்ளது. மேலும், பட்ஜெட்டில் சேமிப்பை அதிகரிப்பதற்கான வழிகளை வலியுறுத்த வேண்டிய அவசியம் உள்ளது.


சவால் 3: சாமானியர்களுக்கு மலிவான சுகாதார சேவைகளை வழங்குதல்


கொரோனா தொற்றுநோய் காலத்தில், சுகாதாரத் துறையை வலுப்படுத்துவது, சாமானியர்களுக்கு அத்தியாவசிய சுகாதார சேவைகள் குறைந்த விலையில் கிடைப்பதை உறுதி செய்வதே நிதி அமைச்சரின் முன் உள்ள சவால். நிதியமைச்சர் சுகாதாரத் துறைக்கான பட்ஜெட்டை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தது 3 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். 


சவால் 4:  வரி விலக்கு


கடந்த பல படஜெட்களில் தொழிலாள வர்க்கம் ஏமாற்றமடைந்துள்ளது. அரசு வரிச்சுமையை குறைக்க வேண்டும் என்பதே மாதம் சம்பளம் பெறும் நடுத்தர வர்க்கத்தினரின் விருப்பம். ஆனால், வரி வசூலை அதிகரித்து பொருளாதாரத்தை மேம்படுத்தும் நிலை உள்ள இந்த கொரோனா கால கட்டத்தில்,  நிதி அமைச்சரின் முன் இது முக்கிய சவாலாக இருக்கும். அதே சமயம் சாமானியர்களும் திருப்தி படும் வகையில் எந்த விதமான அறிவிப்புகள் வரும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


ALSO READ | Budget 2022: விவசாயிகளுக்கான பல முக்கிய அறிவிப்புகள் வரும் என எதிர்பார்ப்பு!!


சவால் 5: விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குதல்


2022ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்பது பிரதமர் மோடியின் நீண்ட நாள் கனவாக உள்ளது. விவசாயிகளின் அதிருப்தியால் விவசாயச் சட்டங்களையும் அரசு திரும்பப் பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட நிலையில், இந்த பட்ஜெட்டில் விவசாயிகள் குறித்து வெளியாகும் அறிவிப்பு என்னவக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. கிசான் சம்மன் நிதியின் பணத்தை அரசாங்கம் அதிகரிக்க கூடும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். இத்துடன் விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் மேலும் சில அறிவிப்புகள் வெளியாகலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR