நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு மார்ச் 14ம் தேதி தொடங்குகிறது
பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு பகுதிகளாக நடைபெறும். என அறிவிக்கப்பட்டு முதல் பகுதி 2022, ஜனவரி 31ம்தேதி தொடங்கி, 2022 பிப்ரவரி 11ம் தேதி முடிவடைந்தது.
பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு பகுதிகளாக நடைபெறும். என அறிவிக்கப்பட்டு முதல் பகுதி 2022, ஜனவரி 31ம்தேதி தொடங்கி, 2022 பிப்ரவரி 11ம் தேதி முடிவடைந்தது. இந்நிலையில், இரண்டாம் அமர்வு, 2022 மார்ச் 14ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ம் தேதிஅன்று முடிவடையும். 2022, மார்ச் 18 அன்று, ஹோலி பண்டிகையை முன்னிட்டு, அமர்வு இருக்காது.
இந்தியாவில் கோவிட்-19 தொற்று அலை குறைந்து வருவதால், 2022 ஆம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வுகள் மக்களவை மற்றும் மாநிலங்கள் அவையில் மீண்டும் தொடங்க உள்ளது. தொற்றுநோய் பரவியதில் இருந்து நாடாளுமன்றம் வழக்கம் போல் செயல்படுவது இதுவே முதல் முறையாகும். இருப்பினும், சபைகள் முந்தைய அமர்வுகளைப் போலவே கோவிட்-19 நெறிமுறைகள் தொடர்ந்து பின்பற்றப்படும்.
பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது பகுதிக்கான இருக்கை ஏற்பாடுகள் குறித்த முடிவை மாநிலங்கள் தலைவர் வெங்கையா நாயுடு மற்றும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் கூட்டாக எடுத்தனர். கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வு மார்ச் 14 முதல் ஏப்ரல் 8 வரை நடைபெறும்.
மேலும் படிக்க: ‘பாடம் கற்போம், தொடர்ந்து பாடுபடுவோம்’ - காங்கிரஸ்
இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் பொதுச் செயலாளர்களும் கூடி ஆலோசனை நடத்தினர். கோவிட்-19 தொற்றுநோயின் மூன்றாவது அலையில் தொற்று பாதிப்பு கணிசமான அளவு குறைந்துள்ளது என்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மேலும், வைரஸுக்கு எதிராக மக்களுக்கு தடுப்பூசி போடும் பணியும், தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு, விரிவான தடுப்பூசி திட்டங்கள் திருப்திகரமாக நடைபெறுவதால், நாடாளுமன்ற கூட்டத்தை வழக்கம் போல் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வு ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், நடைபெற உள்ளது. இதில் உத்தரபிரதேசம், கோவா, மணிப்பூர் மற்றும் உத்தரகண்ட் ஆகிய நான்கு மாநிலங்களில் பாஜக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மி முதல் முறையாக வெற்றி பெற்றது.
2020 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர், கோவிட் தொற்று காரணமாக மிக குறைந்த அளவிலான நாட்களுக்கு நடத்தப்பட்ட முதல் நாடாளுமன்ற அமர்வு ஆகும். அதேசமயம், 2020 ஆம் ஆண்டின் மழைக்காலக் கூட்டத்தொடர் முழு கோவிட் நெறிமுறைகளை பின்பற்றி நடைபெற்ற முதல் நாடாளுமன்றக் கூட்டமாகும். உறுப்பினர்கள் இரு அவைகளிலும் இரண்டு ஷிப்டுகளிலும் அமர்ந்தனர்.
மேலும் படிக்க: 2 மாநிலங்களில் மட்டுமே ஆட்சி...காங்கிரஸின் பரிதாப நிலை
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR