டெல்லி: பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 31-ம் தேதி தொடங்குகிறது. 2017-18-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட் வருகிற பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் உ.பி., உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடைபெற இருப்பதால், பட்ஜெட்டில் மத்திய அரசு சலுகைகளை அறிவிக்கக்கூடும் என்றும், இது வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதன் காரணமாக பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்வதை தள்ளிவைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தன.


இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பட்ஜெட்டை தாக்கல் செய்வது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய செயல் என்றும், பட்ஜெட் அறிவிப்புகள் வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், பட்ஜெட் தாக்கல் செய்வதை தேர்தல் முடியும் வரை தள்ளிவைக்குமாறு உத்தரவிடவேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.


தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் என்.வி.ரமணா, டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று இந்த பொதுநல மனு விசாரணைக்கு வந்தது.


மனுவை விசாரித்த நீதிபதிகள், மத்திய அரசின் பட்ஜெட் வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கு உறுதியான ஆதாரம் எதையும் மனுதாரர் தெரிவிக்கவில்லை என்றும், மத்திய பட்ஜெட்டை மாநில சட்டசபை தேர்தல்களுடன் தொடர்புபடுத்த முடியாது என்றும் கூறினார்கள். 


எனவே பட்ஜெட் தாக்கல் செய்வதை தள்ளிவைக்குமாறு உத்தரவிட முடியாது என்றும் கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.