முத்தலாக்கை ஒழிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!!
முத்தலாக் நடைமுறையை ஒழிக்க வகை செய்யும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.
இன்று நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்பட வேண்டிய, நிறைவேற்றப்பட வேண்டிய முக்கிய மசோதாக்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. அத்துடன், இஸ்லாமிய பெண்களின் வாழ்வை பாதிக்கக்கூடிய முத்தலாக் முறையை நீக்க சட்டம் இயற்றலாம் என உச்சநீதிமன்றம் கூறிய நிலையில், அதற்கான மசோதாவின் அம்சங்கள் குறித்து அமைச்சரவையில் ஆலோசிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து முத்தலாக் முறையை நீக்கும் மசோதாவுக்கு கூட்டத்தின் முடிவில் ஒப்புதலும் அளிக்கப்பட்டது. இதையடுத்து, நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.
இம்மசோதா நாடாளுமன்ற இரு அவைகளில் நிறைவேற்றப்பட்டு சட்டமானால், முத்தலாக் கூறி மனைவியை விவகாரத்து செய்யும் கணவருக்கு தண்டனை விதிக்கப்படும்.