PM Narendra Modi Cabinet Reshuffle News: மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் மத்திய அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார். அமைச்சரவை விரிவாக்கத்திற்கு சற்று முன்னதாக அவர் கல்வி அமைச்சகத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தரகண்ட் மாநிலத்தின் ஹரித்வார் நாடாளுமன்ற தொகுதி மக்களவை எம்.பி.யான போக்ரியால், மத்திய அரசின் அமைச்சரவைப் பதவியில் இருந்து நீக்கப்பட்டது ஏன் என்ற காரணம் தெரியவில்லை. 


என்.டி.ஏ அரசாங்கத்தின் அமைச்சரவை சில நாட்களில் விரிவாக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக ரமேஷ் போக்ரியால் பதவி பறிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனும் ராஜினமா செய்துள்ளார். 


Also Read | பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறவிருந்த மத்திய அமைச்சரவைக் கூட்டம் ரத்து


2019 ஆம் ஆண்டில் தேசிய ஜனநாயக கூட்டணி இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்த பிறகு அமைச்சரவை முதன் முதலாக விரிவாக்கப்படுகிறது.  


மத்திய அமைச்சரவையில் தற்போது, 53 பேர் அமைச்சர்களாக உள்ளனர். அமைச்சரவை விரிவாக்கத்தில் மேலும் பலர் சேர்க்கப்படலாம், எண்ணிக்கை 80 ஆக அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. கூட்டணி கட்சிகளுக்கும் மத்திய அமைச்சரவையில் பதவி கொடுக்கலாம் என்றும் கூறப்படுகிறது.  


உத்தரபிரதேசத்தில் இருந்து மூன்று பேருக்கு பதவி கிடைக்கும் வாய்ப்பு உண்டு. அப்னா தள் கட்சியின் அனுப்ரியா படேலும் அமைச்சரவையில் இடம் பெறலாம் என்று கூறப்படுகிறது. மத்திய பிரதேசத்தில் இருந்து  ஜோதிராதித்யா சிந்தியா மற்றும் ராகேஷ் சிங்கிற்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.


Also Read | எட்டு மாநிலங்களுக்கு புதிய அளுநர்கள் நியமனம்; குடியரசுத் தலைவர் உத்தரவு


மத்திய அமைச்சரவை இன்று மாலை 6 மணிக்கு விரிவாக்கம் செய்யப்படுவதை அடுத்து, பல முக்கிய அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். ரமேஷ் போக்ரியால் தவிர, மத்திய தொழிலாளர்  நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்குவர், குழந்தைகள் மற்றும் பெண்கள் அமைச்சர் தபாஸ்ரீ சவுத்ரி, ரசாயனத்துறை அமைச்சர் சதானந்த கவுடா, இணை அமைச்சர்கள் சஞ்சய் தாத்ரே, ராவ் சாகேப் ஆகியோரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.


மத்திய அமைச்சரவையில் மாற்றம் தொடர்பான தகவல்களுக்கு மத்தியில் ஆளுநர் நியமனம் தொடர்பான அறிவிப்பு நேற்று வெளியானது. எட்டு மாநிலங்களுக்கான ஆளுநர்களை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று அறிவித்தார்.  


புதிய ஆளுநர்கள் எட்டு பேர் நியமனத்தின் போது புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு ஆளுநர் நியமிக்கப்படவில்லை. தெலுங்கானா மாநில ஆளுநராக பதவி வகிக்கும் தமிழிசை சவுந்தர்ராஜனே புதுச்சேரியில் ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகிப்பார்.  


Also Read | பிரதமர் மோடியை புகழ்ந்த ஒவைசி; காரணம் என்ன


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR