புதுடெல்லி: திபெத்திய ஆன்மீகத் தலைவரான 14 வது தலாய் லாமாவின் 86 வது பிறந்தநாளில், பிரதமர் நரேந்திர மோடி செவ்வாயன்று, அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவருக்கு “நீண்ட ஆரோக்கிய வாழ்க்கை வாழ வேண்டும் என” வாழ்த்து தெரிவித்தார்.
"ஆன்மீக தலைவர் தலாய்லாமாவின் 86 வது பிறந்தநாளில் வாழ்த்துக்களைத் தெரிவிக்க அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள் ”என்று பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.
தலாய்லாமாவின் பிறந்தநாளில் அவரை வாழ்த்தியதற்காக பிரதமர் மோடியை (PM Modi) பாராட்டிய AIMIM தலைவர் அசாதுதீன் ஒவைசி, தலாய் லாமாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்திருந்தால், அது சீனாவுக்கு இன்னும் வலுவான செய்தியை கொடுத்திருக்கும் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து ட்வீட் செய்து அசுதுதீன் ஒவைசி, “மிக சிறப்பு! ஆனால் நீங்கள் ஆன்மீக தலைவர் தலாய் லாமாவை நேரில் சந்தித்திருந்தால் அது சீனாவுக்கு இன்னும் ஒரு வலுவான செய்தியை அனுப்பியிருக்கும் ”என்று பிரதமரின் ட்வீட்டுக்கு பதிலளிக்கும் வகையில் திரு ஒவைசி ட்வீட் செய்துள்ளார்.
Very good, sir! But it would have sent a strong message to China had you met HH Dalai Lama in person https://t.co/gtjOwW58GB
— Asaduddin Owaisi (@asadowaisi) July 6, 2021
தனது பிறந்த நாளில், ஆன்மீக தலைவர் தலாய்லாமா இந்தியாவுக்காக ஒரு வீடியோ செய்தியை வெளியிட்டுள்ளார்.
தனது பிறந்தநாளில் ஒரு வீடியோ செய்தியில், தலாய் லாமா இந்தியாவைப் பாராட்டியதோடு, “நான் அகதியாகி இந்தியாவில் குடியேறியதிலிருந்து, தற்போது வரை, இந்தியாவின் சுதந்திரம் மற்றும் மத நல்லிணக்கத்தை நான் முழுமையாகப் அனுபவித்து வருகிறேன்” என்றார்.
"நேர்மை, கருணை மற்றும் அகிம்சை போன்ற இந்தியாவின் மதச்சார்பற்ற விழுமியங்களில் தனக்கு மிகுந்த மரியாதை இருப்பதாக அவர் கூறினார்.
ALSO READ | மத்திய அமைச்சரவை விரிவாக்கம்; பிரதமர் மோடி தலைமையிலான கூட்டம் ரத்து
14 வது தலாய் லாமா பற்றிய தகவல்கள்:
தலாய் லாமா திபெத்தின் ஆன்மீகத் தலைவர்.
வடகிழக்கு திபெத்தின் அம்டோவில் உள்ள தாக்சர் என்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய குக்கிராமத்தில், ஒரு விவசாய குடும்பத்தில், ஜூலை 6, 1935 இல் பிறந்தார்.
அவரது இரண்டு வயதில்,லாமோ தோண்டப் என்று பெயரிடப்பட்ட குழந்தையாக இருந்த போது, முந்தைய 13 வது தலாய் லாமா துப்டன் கயாட்சோவின் மறுபிறவியாக அங்கீகரிக்கப்பட்டார்.
1950 ஆம் ஆண்டில், திபெத்தின் மீது சீனாவின் படையெடுப்பிற்குப் பிறகு, அவர் முழு அரசியல் அதிகாரத்தை ஏற்க அழைக்கப்பட்டார். ஆனால், 1959 இல், அவர் நாடுகடத்தப்பட்டார். அப்போதிருந்து, அவர் இந்தியாவில் உள்ள தர்மஷாலாவில் வசித்து வருகிறார்.
ALSO READ | இது நடந்தால்.. அசதுத்தீன் ஒவைசி உ.பி.யின் அடுத்த முதல்வராக முடியும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR