திரிணமூல் காங்கிரஸ் கொலை செய்த பாஜக தொண்டர்களின்  தாய்மார்களின் வலியை உணர்தீர்களா என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜிக்கு  அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் உடல்நிலை விரைவில் குணமடைய வாழ்த்துவதாக  கூறிய அவர், திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரால் கொல்லப்பட்ட பாஜக தொண்டர்களின் குடும்பத்தினரின் வலியை மம்தா எப்பொழுதாவது உணர்ந்திருக்கிறாரா என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா (Amit Shah) கேள்வி எழுப்பியுள்ளார்.


பாஜக தொண்டர்களின் குடும்பத்தினர் அனுபவித்த  மன வேதனையை உணராத முதல்வர் மம்தா பேனர்ஜிக்கு,  நிச்சயமாகத் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என தெரிவித்தார்.


மேற்கு வங்கத்தின் 294 தொகுதிகளில், 8 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. வரும் 27-ம் தேதிமுதல் கட்டத் தேர்தல்  நடைபெற உள்ள நிலையில்,  ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியும், எதிர்க்கட்சியான பாஜகவும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன.


'மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், அரசு ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு, 7-வது ஊதியக்குழு நிச்சயம் அமல்படுத்தப்படும் என அவர் உறுதி அளித்தார்


ALSO READ | தமிழக முதலவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று எடப்பாடியில் வேட்பு மனு தாக்கல்..!!


பழங்குடியினச் சான்றிதழ் வழங்குவதற்குக்கூட திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் கமிஷன் கேட்கிறார்கள் என குற்றம் சாட்டிய அமித ஷா, பாஜக ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தில் உள்ள பழங்குடிகளின் உரிமைகள் பாதுகாக்கப்படும் எனவும் அவர்களுக்கான கல்வி, சுகாதாரம், குடிநீர் ஆகிய தேவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும் உறுதி அளித்தார்.


மம்தாவின் ஆட்சியில் மாநிலம் 10 ஆண்டுகள் பின்தங்கிவிட்டது எனவும்,  இந்தியாவின் தலைமையாக, சிறந்த சுதந்திர போராட்ட வீரர்களை வழங்கிய சிறப்புள்ள மேற்கு வங்க மாநிலம், இன்று குண்டர்கள் ராஜ்ஜியம் உள்ள மாநிலமாக உள்ளது என குற்றம் சாட்டினார். 


ALSO READ| Kerala Assembly Election 2021: பாலக்காடு தொகுதியில் Metroman ஸ்ரீதரன் போட்டி


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR