தமிழக முதலவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று எடப்பாடியில் வேட்பு மனு தாக்கல்..!!

தமிழக முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் ஆன திரு.எடப்பாடி கே.பழனிச்சாமி, இன்று எடப்பாடியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 15, 2021, 02:40 PM IST
  • வேட்பு மனு தாக்கல் செய்யும் முன், இன்று காலை பெரியசோரகை சென்றாய பெருமாள் கோவிலில் அவர் சாமி தரிசனம் செய்தார்.
  • தமிழகக்த்தில், 234 தொகுதியிலும் வரும் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
  • எடப்பாடி தொகுதியில் அவர் ஏழாவது முறையாகப் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக முதலவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று எடப்பாடியில் வேட்பு மனு தாக்கல்..!! title=

தமிழக முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் ஆன திரு.எடப்பாடி கே.பழனிச்சாமி, இன்று எடப்பாடியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். 

 தமிழகக்த்தில், 234 தொகுதியிலும் வரும் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்று அவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி (Edappadi Palanisamy) தனது சொந்த தொகுதியான சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடியில் மீண்டும் போட்டியிடுகிறார். இதற்காக எடப்பாடி தாலுகா அலுவலகத்திற்கு சென்று அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். எடப்பாடி தொகுதியில் அவர் ஏழாவது முறையாகப் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
திரு. எடப்பாடி பழனிசாமி நான்கு முறை (1989, 1991, 2011 மற்றும் 2016) ஆகிய ஆண்டுகளில் எடப்பாடியிலிருந்து வென்றுள்ளார், மேலும் இப்பகுதி ஆளும் கட்சியின் கோட்டைகளில் ஒன்றாகும்.

வேட்பு மனு தாக்கல் செய்யும் முன், இன்று காலை பெரியசோரகை சென்றாய பெருமாள் கோவிலில் அவர் சாமி தரிசனம் செய்தார்.

வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளூர் தாலுகா அலுவலகத்தை அடைய சிறிது தூரம் நடந்து சென்ற முதலமைச்சர், அதற்கு தேவையான ஆவணங்களை சமர்ப்பித்தார். எடப்பாடி பழனிசாமி பின்னர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் தேர்தல் பேரணிகளில் உரையாற்றுகிறார்.

விலை இல்லா அம்மா வாஷிங் மெஷின் வழங்கும் திட்டம், விலையில்லா அரசு கேபிள் திட்டம், தமிழ்நாட்டில் வீட்டில் ஒருவருக்கு அரசு பணி, உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க நடவடிக்கை. ஆட்சிக்கு வந்தவுடன் பெட்ரோல் டீசல் விலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ALSO READ | TN Assembly Election 2021: பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News