மக்களவையில் குடியுரிமை மசோதாவை தாக்கல் செய்யும் உள்துறை அமைச்சர் அமித் ஷா!
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டிசம்பர் 9 ஆம் தேதி மக்களவையில் குடியுரிமை திருத்த மசோதாவை தாக்கல் செய்ய உள்ளார்!!
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டிசம்பர் 9 ஆம் தேதி மக்களவையில் குடியுரிமை திருத்த மசோதாவை தாக்கல் செய்ய உள்ளார்!!
டெல்லி: குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்ய உள்ள நிலையில், மசோதாவை கடுமையாக எதிர்க்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மதரீதியிலான அடக்குமுறையைத் தொடர்ந்து, இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சமூகத்தினருக்கு குடியுரிமை வழங்குவதில் உள்ள நிபந்தனைகளைக் குறைக்கும் வகையில் குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
1955 ஆம் ஆண்டு குடியுரிமை சட்டத்தின்படி, அண்டை நாடுகளில் இருந்து குடிபெயர்ந்து 12 ஆண்டுகளுக்கும் மேலாக வசிப்போருக்கு குடியுரிமை வழங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், உரிய ஆவணங்கள் எதுவுமில்லை என்றாலும், இந்தியாவில் குறைந்தது 7 ஆண்டுகள் வசித்தாலே அவர்களுக்கு குடியுரிமை வழங்க திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. மசோதா நிறைவேற்றப்படும் பட்சத்தில், சட்டவிரோதமாக குடியேறியதாக ஏற்கனவே தொடரப்பட்ட வழக்குகளில் இருந்து சட்ட பாதுகாப்பு அளிக்கப்படும். அவர்கள் குடியுரிமை கோரி விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் ஆவார்கள்.
60 ஆண்டுகள் பழமையான குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்யக் கோரும் மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தாக்கல் செய்கிறார். கடந்த ஜனவரி மாதம் மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டபோதும், அதன் பதவிக்காலம் முடிந்துவிட்டதால் மசோதா காலாவதியாகிவிட்டது. இந்த சட்டத் திருத்த மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்களும், காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், தி.மு.க மற்றும் இடதுசாரி கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
மதரீதியாக பிளவுபடுத்துவதால், இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் கடுமையாக எதிர்க்கப் போவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. அசாம் ஒப்பந்தத்துக்கு முரணாக இருப்பதாகக் கூறி,வடகிழக்கு மாணவர்கள் அமைப்பு இன்று முழுஅடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.