Anurag Thakur on Rahul Gandhi:`நம் இராணுவத்திற்கு நீங்கள் என்ன செய்தீர்கள்?` ராகுல் காந்திக்கு அமைச்சர் அனுராக் பதிலடி
India China Issue: சீனாவுடனான எல்லை மோதல்களை சரியான முறையில் கையாளாததற்காக மத்திய அரசுக்கு எதிராக ராகுல் காந்தி அறிக்கைகளை வெளியிட்டார்.
புதுடில்லி: இந்தியா-சீனா எல்லை பிரச்னை குறித்து ராகுல் காந்தி கூறிய கருத்துக்கு, மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னதாக, 2020 கல்வான் மோதலில் இருந்து பதட்டங்கள் நிலவி வருவதால், சீனாவுடனான எல்லை மோதல்களை சரியான முறையில் கையாளாததற்காக மத்திய அரசுக்கு எதிராக ராகுல் காந்தி அறிக்கைகளை வெளியிட்டார். இந்திய ராணுவத்தை ராகுல் காந்தி விமர்சிப்பதாக குற்றம் சாட்டிய தாக்கூர், "காங்கிரஸுக்கு நம் நாட்டிந் மீது நம்பிக்கை இல்லை" என்று கூறினார்.
"சீனா போருக்குத் தயாராகிறது, ஊடுருவலுக்கு அல்ல. அவர்களின் ஆயுதங்களைப் பாருங்கள். அவர்கள் போருக்குத் தயாராகிறார்கள். நமது அரசாங்கம் அதை ஏற்கவில்லை. இந்திய அரசு நிகழ்வுகளின் அடிப்படையில் செயல்படுகிறது, வியூகத்தில் அல்ல" என்று ராகுல் காந்தி கூறியிருந்தார்.
மேலும், "நமது நிலத்தை சீனா கைப்பற்றியுள்ளது. ராணுவ வீரர்களை அடித்து விரட்டுகிறது. சீனாவின் அச்சுறுத்தல் தெளிவாக உள்ளது. அரசு அதை புறக்கணித்து மறைக்கிறது. லடாக் மற்றும் அருணாச்சலத்தில் தாக்குதலுக்கு சீனா தயாராகி வருகிறது. இந்திய அரசு தூங்கிக்கொண்டிருக்கிறது" என ராஜீவ் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | நீதித்துறை VS மத்திய அரசு மோதல் முடிவுக்கு வருமா?
இதற்குப் பதிலளித்த அனுராக் தாக்கூர், "டோக்லாம் சம்பவத்தின் போது, இந்திய ராணுவம் சீன ராணுவத்துடன் சண்டையிட்ட போது சீன அதிகாரிகளுடன் ராகுல் காந்தி சூப் சாப்பிடுவதைப் பார்த்தோம். இந்திய ராணுவம் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியபோதும், அவர் எங்களிடம் கேள்வி எழுப்பினார். ராகுல் காந்திக்கும் காங்கிரசுக்கும் நமது ராணுவத்தின் மீது நம்பிக்கை இல்லை" என்றார்.
"இன்று இந்தியாவில் 300-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்தியா இப்போது பாதுகாப்பு உபகரணங்களை ஏற்றுமதி செய்யும் நாடாக உள்ளது, இறக்குமதி செய்யும் நாடாக இல்லை. இது 'ஆத்மநிர்பர் பாரத்'. டோக்லாம் சம்பவத்தின் போதும் பிரதமர் மோடியும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் நமது ராணுவ வீரர்களை சென்று பார்த்தனர்" என்று அவர் மேலும் கூறினார்.
"இது 1962 இன் இந்தியா அல்ல, இது 2014 இன் இந்தியா. பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா முன்னேறி வருகிறது. UPA அரசால் 10 ஆண்டுகளாக இராணுவத்திற்கு போர் விமானங்கள், குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள் அல்லது பனி காலணிகளை வாங்க முடியவில்லை. நீங்கள் இராணுவத்திற்காக என்ன செய்தீர்கள்?" என்று தாக்கூர் கேள்வி எழுப்பினார்.
முன்னதாக செவ்வாயன்று, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். "இந்திய இராணுவம் பிஎல்ஏ நமது பிரதேசத்தில் அத்துமீறி நுழைவதை துணிச்சலாகத் தடுத்தது" என்று கூறினார்.
மேலும் படிக்க | Vijay Diwas 2022: 1971 போர் வெற்றியை கொண்டாடும் இந்தியா, தலைவர்கள் வாழ்த்து
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ