இந்திய-இலங்கை எல்லையில் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்திய மத்திய அமைச்சர்!
Respect To Indian Flag In India Sri Lanka Border : இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லையை ஆய்வு செய்த மத்திய பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் இந்தியா பெயர் பலகை அருகே உள்ள தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தினார்
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி அரிச்சல்முனையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய பாதுகாப்பு துறை இணை அமைச்சர் சஞ்சீவ் சீத் இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லை பகுதியில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்ததுடன், இந்திய எல்லையில் உள்ள தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினார்.
நாடு முழுவதும் இன்று சர்வதேச யோகா தினம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதியில் மத்திய பாதுகாப்புத் துறை சார்பில் யோகா பயிற்சி இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று சிறிய ரக ராணுவ விமான மூலம் ஐஎன்எஸ் பருந்து கடற்படை தளத்திற்கு வந்த மத்திய பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் சஞ்சீவ் சீத் இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படை முகாம் களை ஆய்வு செய்த பின்னர் ராமேஸ்வரம் கடல் பகுதியை ஆய்வு செய்ததுடன், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் குறித்து பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
மேலும் படிக்க | உயரப்போகும் கிரெடிட் கார்டு கட்டணங்கள்! புதிய ரூல்ஸ் தெரிஞ்சுக்கோங்க
இதையடுத்து இன்று காலை ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் சாமி தரிசனம் செய்த மத்தி இணை அமைச்சர் பின்னர் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் நடைபெற்ற யோகா தினத்தில் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தார்.
அதனை தொடர்ந்து தனுஷ்கோடி அரிச்சல்முனையிலிருந்து இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹோவர் கிராஃப்ட் கப்பலில் இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லை வரை சென்று கடலுக்கு மத்தியில் அமைந்துள்ள மணல் திட்டில் இறங்கினார்.
பின்னர் சர்வதேச கடல் எல்லையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், கண்காணிப்புகள் குறித்தும் ஆய்வு செய்தவுடன் கண்காணிப்பு பணிகள் குறித்து பாதுகாப்பு அதிகாரியிடம் கேட்டறிந்தார்.
மேலும் படிக்க | வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்? வரம்பை மீறினால் சிக்கல்... ஜாக்கிரதை!!
இதனையடுத்து இந்திய எல்லையில் வைக்கப்பட்டிருந்த இந்தியா என்ற பெயர் பலகைக்கு அருகே நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டதுடன், எல்லையில் உள்ள தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினார்.
பின்னர் மீண்டும் ஹோவர் கிராப்ட் ரோந்து கப்பல் மூலம் தனுஷ்கோடி வந்து சாலை மார்க்கமாக ஐ என் எஸ் பருந்து கடற்படை தளத்திற்கு சென்றார். முன்னதாக முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் நினைவகத்திற்கு சென்று அவரது சமாதியில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் ஆய்வின் போது அவருடன் இந்திய கடலோர காவல்படை மண்டபம் முகாம் நிலைய கமாண்டர் வினைக்குமார் மற்றும் கடற்படை தளத்தின் நிலையை கமாண்டர் கேப்டன் அஸ்வின் மேனன் ஆகியோர் உடன் இருந்தனர்.
மேலும் படிக்க | தங்கம் விலை எந்த அளவு உயரும்? 1 லட்சம் வரை உயரலாம்! சூசகமாக சொல்லும் WGC!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ