கொரோனா இரண்டாம் அலை தொடங்கி, தினசரி தொற்று பாதிப்பு 2 .5 லட்சம் என்ற அளவை தாண்டி இந்தியாவை அச்சுறுத்தி வருகிறது.  இரண்டாவது அலை வீரியமாக பரவி வருவதால், பல மாநிலங்களில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது தொடர்பாக கருத்து தெரிவித்த, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் (Piyush Goyal), நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பிறகு பாதிப்பு ஏதும் ஏற்படக் கூடாது என்ற நோக்கத்துடன் நாங்கள் மாநில அரசுகளுடன் துணை நின்று முழுமையாக ஒத்துழைப்பு தருகிறோம்.
அந்த ஒத்துழைப்பை பயன்படுத்திக் கொண்டு, மாநில அரசுகள் கொரோனா பரவலைக் (Corona Virus) கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்கான தேவை அதிகரித்துவரும் நிலையில், அதன் தேவையை எதிர்கொள்வது எவ்வளவு முக்கியமானதோ அதேபோல், அதற்கான தேவை எழாமல் இருக்கும் வகையில் அது தொடர்பான  நடவடிக்கையை  தீவிரப்படுத்துவம் முக்கியம் என்றார். மாநில அரசுகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும்.


ALSO READ | கொரோனா தடுப்பூசியை கள்ளச்சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை: மத்திய அரசு எச்சரிக்கை


முன்னதாக மகாராஷ்டிராவில் (Maharashtra) ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே பிரதமர் மோடிக்கு கடிதம்  எழுதியது கூறித்து  ட்வீட் செய்திருந்த பியூஷ் கோயல், மத்திய அரசின் மீதான குற்றச்சாட்டு ஏற்புடையது அல்ல. தொழிற்சாலைப் பயன்பாட்டிற்கான ஆக்ஸிஜன் சிலிண்டர்களைக் கூட மருத்துவப் பயன்பாட்டிற்க்காக  பயன்படுத்தி வரும் நிலையில், மத்திய அரசு 110% என்ற அளவிற்கு ஆக்ஸிஜன் சிலிண்டர் விநியோகத் திறனை அதிகரித்துள்ளது என குறிப்பிட்டார்.


மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள 12 மாநிலங்களுக்கு குறிப்பாக, மகாராஷ்டிராவுக்கு முன்னுரிமை அளித்து ரயில்வேயின் பசுமை வழித்தடம் வழியாக எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் என அவர் தெரிவித்திருக்கிறார்.
மேலும், கொரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர பிரதமர் மோடி (PM Narendra Modi) தினமும் 19 மணி நேரம் பணியாற்றி வருவதாக கூறிய அவர், கொரோன அபரவலை அரசியலாக்கக் கூடாது என்றார்.


ALSO READ | Covid-19: கொரோனாவை சமாளிக்க மோடிக்கு டிப்ஸ் தரும் மன்மோகன் சிங்


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR