பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் மாற்று எரிபொருளுக்கு மக்கள் மாற வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"இந்தியாவில் 81 சதவீத லித்தியம் அயன் பேட்டரிகளை உருவாக்குகிறோம். லித்தியம் அயனிக்கு மாற்றாக ஒன்றை உருவாக்க எனது அமைச்சகம் இன்று முன்முயற்சி எடுத்தது. அரசு ஆய்வகங்களில் இது தொடர்பான அனைத்து ஆராய்ச்சிகளும் மேற்கொண்டு வருகின்றன. ஹைட்ரஜன் எரிபொருள் செல்களை உருவாக்குங்கள்" என நிதின் கட்கரி (Nitin Gadkari) தெரிவித்தார்


வேலூர் மாவட்டத்தில், ராணிபேட்டையில், தோல் தொழிற்சாலைகளின் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யும் மையம்  ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அடையாறு மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தை திறந்து மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி திறந்து வைத்தார்.


இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிதின் கட்கரி, சென்னை பெங்களூரு இடையிலான எக்ஸ்பிரஸ் சாலை பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் இந்த திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுவார் என்றும் தெரிவித்தார்.


தேசிய நெடுஞ்சாலைகளில் பாஸ்டேக் (FASTag) பயன் படுத்துவது கட்டாயமக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான காலக்கெடு மேலும் நீட்டிக்கப்படாது என்று நிதின் கட்கரி திட்டவட்டமாக தெரிவித்தார்.


சேலம் சென்னை எட்டு வழி சாலை திட்டம் குறித்தும்,   வேறு சில திட்டங்கள் குறித்தும்,  இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் கூறினார்.


மேலும், விவசாயிகளிடமிருந்து கிடைக்கும் வேளாண் பொருட்களிலிருந்து எரிபொருள் தயாரிப்பது  பசுவின் சாணத்திலிருந்து பெயிண்ட் தயாரிப்பது, உள்ளிட்ட மாற்று வழிகளை கண்டறிய அரசுகள் முயற்சிக்க வேண்டும் என்றார்.
பெட்ரோல் டீசல் உள்ளிட்டவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்து வரக்கூடிய நிலையில் மக்கள் மாற்று எரிபொருளுக்கு மாறவேண்டும் என்பதே சிறந்தது எனறு தான் அறிவுறுத்துவதாக  நிதின் கட்கரி தெரிவித்தார்.