பாராளுமன்ற பட்ஜெட் அமர்வானது நாளை (திங்கள்) தொடங்குகிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த பட்ஜெட் கூட்டத்தொடரானது, ஜனாதிபதி ராம்நாத் பதவி ஏற்றப் பின்னர் அறிவிக்கப்படும் முதல் பட்ஜெட் அமர்வு என்பது குறிப்பிடத்தக்ககது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

யூனியன் பட்ஜெட் 2018 ஆனது வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. பிப்ரவரி 9 வரை இந்த கூட்டத்தொடர் தொடர்கிறது. பின்னர் பட்ஜெட் அமர்வின் இரண்டாவது கட்டம் மார்ச் 5-ஆம் தேதி தொடங்கி வரும் ஏப்ரல் 6-ஆம் நாள் வரை நடைபெறுகிறது.


இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் பின்தங்கிய வகுப்பினருக்கான கமிஷன் மற்றும் முத்தலாக் விவகாரங்கிளின் முக்கிய பின்னூட்டங்களைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் இந்த பட்ஜெட் கூட்டத் தொடரானது மின் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கிலும், சுற்றுச்சூழலை மாசுபாட்டை குறைக்கும் வகையிலும் இருக்க வாய்ப்புகள் உள்ளதாகவும், அதன் நோக்கில் மின் வாகனங்களுக்கு அதிக அளவில் வரிச்சலுகை அளிக்கப்படலாம் எனவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


நாட்டில் 40% தனிமனிதர்களிடம் மின் வாகனங்கள் பயன்பாட்டை கொண்டுவரவும், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக இயக்கப்படும் அரசு பேருந்துகள் உள்ளிட்டவற்றை 100 சதவீதம் மின் வாகனங்களாக மாற்றவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இந்த திட்டத்தினை அமல் படுத்த இத்தகு வரிசலுகை அளிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


முன்னதாக நேற்று நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பேசுகையில் GST வரி குறைக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். இதனால் தற்போது இருக்கும் மின் வாகனங்களுக்கான GST வரி 12% இருந்து 5% குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.