இந்தியாவிற்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள பிரிட்டன், ஜெர்மெனி மக்கள் காஷ்மீர் பயணத்தை தவிர்க வேண்டும் என அந்நாட்டு அரசுகள் உத்தரவு பிரப்பித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய எல்லைக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ உள்ளதாக உளவுத்துறையிடம் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து ஜம்மு-காஷ்மீர் பகுதியில் உள்ள இந்திய - பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 


பாகிஸ்தான் ஆதரவுடன் நடைபெறும் பயங்கரவாத தாக்குதல் அபாயம் காரணமாக, காஷ்மீர் மாநிலம் முழுவதும் வழக்கமாக 60,000 -க்கும் மேற்பட்ட வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுப்படுத்த படுகின்றனர்.


இந்நிலையில், அமர்நாத் யாத்திரை காரணமாக சமீபத்தில் அங்கு மேலும் 20,000 வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுப்படுத்தப் பட்டுள்ளனர். இதனிடையே கடந்தமாதம் 26-ஆம் தேதி காஷ்மீரின் பள்ளத்தாக்குப் பகுதிக்கு மேலும் 10,000 வீரர்களைப் பாதுகாப்பு பணிக்காக மத்திய அரசு அனுப்பியது.


ராணுவ குவிப்பு மாநில சிறப்பு சட்டத்தை ரத்துசெய்ய ஏற்படுத்தப்படும் முயற்சி என பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


இதனிடையே எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் காஷ்மீருக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் , யாத்திரை வரும் பக்தர்கள் அனைவரும் திரும்பிச் செல்லுமாறு மாநில உள்துறை அமைச்சகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதற்கிடையில் ஜம்மு-காஷ்மீர் பகுதியில் பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் நிலவுவதால் அங்கு யாரும் சுற்றுலா செல்லவேண்டாம் என்றும் ஜம்மு-காஷ்மீர் பயணத்தை தவிர்க்குமாரும் பிரிட்டன் அரசு உத்தரவிட்டிருந்தது. இங்கிலாந்து நாட்டின் உத்தரவையடுத்து ஜெர்மெனி அரசும் அந்நாட்டு மக்களுக்கு அதே உத்தரவை பிறப்பித்துள்ளது.