விண்வெளி ஆய்வில் இந்தியாவின் சாதனையை கண்டு அமெரிக்கா வியப்படைந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா விண்வெளி ஆய்வில் பல புதிய சாதனைகளை அடுத்தடுத்து படைத்து வருகிறது.உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட செயற்கைகோள்கள், ராக்கெட்டுகள், ராக்கெட்டுகளை இயக்கும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கிரயோஜனிக் என்ஜின்களை சொந்தமாக உருவாக்கி, விண்வெளி ஆய்வு துறையில் வெற்றிகொடி நாட்டிவரும் இந்தியா, உள்நாட்டு தேவைக்காக மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கு சொந்தமான பல்வேறு வகையான செயற்கை கோள்களையும் இங்கிருந்தபடி விண்ணில் செலுத்தி  உலக நாடுகளின் கவனத்தை கவர்ந்து வருகிறது.


இந்த புகழ் வரலாற்றின் புதிய அத்தியாயமாக கடந்த 15-ம் தேதி ஒரே ராக்கெட் மூலம் 104 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தியதன் வாயிலாக இந்திய விண்வெளித்துறை ஆய்வு மையமான இஸ்ரோ அசுரத்தனமான உலக சாதனை படைத்தது.


இந்த சாதனையை கண்ட பின்னர் இதைக்குறித்து அமெரிக்காவின் உளவுத்துறையின் புதிய தலைவர் டான் கோட்ஸ் கூறியதாவது:-


ஒரே நேரத்தில், ஒரே ராக்கெட் மூலம் 104 ஏவுகணைகளை இந்தியா விண்வெளியில் செலுத்தியது என்ற தகவலை அறிந்து நான் அதிர்ச்சி அடைந்தேன். அவை அளவில் சிறியதாக இருக்கக் கூடும். ஆனால், இதை பார்த்த பின்னரும் நாம் பின்தங்கி இருக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.