பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்படும் விசாவின் கால அளவை குறைத்துள்ளதாக அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காஷ்மீர் புல்வாமா தாக்குதலுக்கு பிறகு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பாகிஸ்தானிற்கு பல வழிகளிலும் அழுத்தம் கொடுத்து வருகின்றன. குறிப்பாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை முற்றிலுமாக அகற்ற வேண்டும் என அமெரிக்கா நெருக்கடி கொடுத்து வருகிறது. 


இதற்கிடையில், பயங்கரவாதிகளுக்கு எதிராக மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் அமெரிக்கா வழங்கிய எப்16 ரக விமானத்தை இந்திய விமானப்படை தளம் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் பயன்படுத்தியதாக அமெரிக்காவிடம் இந்தியா புகார் அளித்துள்ளது. இதற்கான ஆதாரங்களையும் அமெரிக்காவிடம் இந்தியா வழங்கி உள்ளது.


இதனையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அமெரிக்கா தனது பிடியை இறுக்கி வரும் நிலையில், தற்போது புதிய நடவடிக்கையாக பாகிஸ்தானியர்களுக்கு விசா கட்டுப்பாடும் விதித்துள்ளது. 


அதன்படி அமெரிக்கா வருவதற்கு பாகிஸ்தானியர்கள் வழங்கப்படும் டூரிஸ்ட் விசாவின் கால அளவை 5 ஆண்டுகளில் இருந்து 1 ஆண்டாக குறைத்துள்ளது. மேலும் பாகிஸ்தான் பத்திரிகையாளர்களுக்கு இனிமேல் ஒரு மாதத்திற்கு மட்டுமே விசா வழங்கப்படும் எனவும் அதிரடியாக அறிவித்துள்ளது. இத்தகவலை அமெரிக்க தூதரக செய்திதொடர்பாளர் தெரிவித்துள்ளார்.