COVID-19 பரவலால் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில் கட்டணம் செலுத்தப்படாததால், குழந்தைகளின் பெயர்கள் பள்ளி பதிவேட்டில் இருந்து அகற்றப்பட்டது குறித்து  பல பெற்றோர்கள் அளித்த புகார்களை முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் கவனத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதுடில்லி (New Delhi): 2020-21 கல்வி ஆண்டிற்கான சேர்க்கை, மறு சேர்க்கை மற்றும் பிற கல்விக் கட்டணங்களை மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளிகள், எந்தவொரு மாணவரிடமிருந்தும் வசூலிக்கக் கூடாது என்று பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.


ட்விட்டரில் முதல்வர் அம்ரிந்தர் சிங் நடத்தும்  #AskCaptain  என்ற வாராந்திர அமர்வின் போது இந்த அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர், COVID-19 நெருக்கடிக்கு மத்தியில் கட்டணம் செலுத்தப்படாததால், குழந்தைகளின் பெயர்கள் பள்ளி பதிவேட்டில் இருந்து அகற்றப்பட்டது குறித்து  பல பெற்றோர்கள் அளித்த புகார்கள் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது என்றார்.


ALSO READ | உயர் செயல் திறன் கொண்ட கோவிட் -19 பரிசோதனை அமைப்பை பிரதமர் மோடி தொடக்கி வைக்கிறார்


"ஃபதேஹ்கர் சாஹிப்பைச் சேர்ந்த திரு மன்பிரீத் சிங், பள்ளி சேர்க்கை கட்டணம் செலுத்தாததால், தனது மகளின் பெயர் பள்ளி பதிவேட்டில் இருந்து நீக்கப்பட்டது என முதலவரிடம் தெரிவித்தார். இதை நடக்க விட மாட்டேன் என பிரதமர் உறுதி அளித்துள்ளார். திங்களன்று பதேஹ்கர் சாஹிப்பை சேர்ந்த மாவட்ட கலெக்டரை பள்ளிக்கு செல்லுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது”என்று பஞ்சாப் CMO ட்வீட் செய்துள்ளார்.


COVID-19 தொற்றுநோயால் பள்ளிகள் மூடப்பட்ட காலத்திற்கு பள்ளி கட்டணம் வசூலிக்கப்படக்கூடாது என்று நாடு முழுவதும் பெற்றோர்கள் கோரி வரும் நேரத்தில் பஞ்சாப் CM அம்ரிந்தர் சிங்கின் இந்த அறிக்கை வந்துள்ளது.


ALSO READ | Unlock 3: பள்ளிகள், கல்லூரிகள், ஜிம், தியேட்டர்கள் நிலை என்ன..!!!


பஞ்சாப் மாநிலத்தில்,  12 ஆம் வகுப்பு தேர்வு  முடிவுகள் ஜூலை 1 ஆம் தேதி  வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது , தேர்ச்சி விகிதம் 4.5 சதவீதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் 94.32 சதவீதமாக பதிவாகியுள்ளது.