ஆயுதம் ஏந்திய படகுகள் பரிசோதனை! ரிமோட் மூலம் கட்டுப்படுத்தப்படும் ஆளில்லா படகு
Defence Expo 2022: பூனேயின் பாமா அஸ்கேட் அணையில் நடைபெற்ற படகு பரிசோதனை வெற்றி... ஆயுதம் பொருத்தப்பட்ட ஆளில்லா படகுகள் ரிமோட் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றன
புதுடெல்லி: பாதுகாப்புத் துறை கண்காட்சி அக்டோபர் 18 முதல் 22 வரை நடைபெற உள்ள நிலையில், அதற்குக் முன்னதாக, புனேவில் 3 ஆளில்லா தொலை கட்டுப்பாட்டு ஆயுதம் பொருத்தப்பட்ட படகுகளை பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், டிஆர்டிஓ சோதனை செய்தது. இந்த படகுகளை தனியார் பாதுகாப்பு உற்பத்தி நிறுவனமான சாகர் டிஃபென்ஸ் இன்ஜினியரிங் நிறுவனத்துடன் இணைந்து DRDO உருவாக்கியுள்ளது. இந்தப் படகுகள், கண்காணிப்பு நோக்கங்களுக்காகவும், ரோந்துப் பணிக்காகவும், உளவு பார்க்கவும் ஒட்டுமொத்த கடல் பாதுகாப்புக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
ஆளில்லா படகுகள் மனித உயிர்கள் பலியாகும் அபாயத்தை நீக்குகிறது என்பது தனிச் சிறப்பாகும். தொழில்நுட்ப அம்சங்களைப் பொருத்தவரை, இந்தப் படகுகள் சுமார் 4 மணி நேரம் தாங்கும் திறன் கொண்டவை, இந்தப் படகுகள் வெவ்வேறு வகைகளில் வேறுபடுகின்றன. தற்போது, படகு அதிகபட்சமாக மணிக்கு 10 கடல் மைல் வேகத்தில் செல்ல முடியும், ஆனால் அதை மேலும் 25 கடல் மைல்களாக அதிகரிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | ஆயுதப்படைகளுக்கான தொழில்நுட்பங்களைக் காண்பிக்கும் DRDO வீடியோ
இது தொடர்பான வீடியோ அனைவரையும் கவர்ந்துள்ளது. இணையத்தில் ஏஎன்ஐ செய்தி முகமையால் வெளியிடப்பட்ட பயிற்சி வீடியோவை பலரும் பகிர்ந்துள்ளனர். பலரும் பார்த்து, பகிர்ந்து, பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த படகுகளின் சில வகைகள் லித்தியம் பேட்டரிகள் கொண்ட மின்சார உந்துவிசை அமைப்பைப் பயன்படுத்துகின்றன, சிலவற்றில் பெட்ரோலைப் பயன்படுத்தும் போர்டு எஞ்சினும் உள்ளது என்று டிஆர்டிஓ தெரிவித்துள்ளது.
பாதுகாப்புத் துறை கண்காட்சியை முன்னிட்டு, புனேவில் ரிமோட் மூலம் கட்டுப்படுத்தப்படும் இந்த படகுகளில் ஆயுதம் பொருத்தப்பட்டுள்ளது. பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்(டிஆர்டிஓ) உருவாக்கியுள்ள படகு சோதனை, பூனேயின் பாமா அஸ்கேட் அணையில் நேற்று நடைபெற்றது.
மேலும் படிக்க | திருப்பூரில் அரசு வேலைக்கான வாய்ப்பு! நேரடி நேர்காணல் மூலம் பணி நியமனம்
மேலும் படிக்க | துர்கா பூஜை சிலைக் கரைப்பின் போது ஆற்றில் வெள்ளம்: 7 பேர் பலி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ