லக்னோ: உன்னாவ் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவரின் சாலை விபத்து வழக்கில் புதிய திருப்பம் வெளிவந்துள்ளது. விபத்துக்கு நடப்பதற்கு முன்பே, பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணும், அவரது தாயாரும் இந்திய தலைமை நீதிபதிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளனர். அதில் எங்களால் குற்றம் சாட்டியவர்களால் இருக்கும் அச்சுறுத்தல்கள் குறித்து அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடிதத்தின் மூலம், பாதிக்கப்பட்டவரின் தாயும் பாதிக்கப்பட்ட பெண், எங்களுக்கு நீதி வேண்டும் என கோரியுள்ளனர். இந்த கடிதம் ஜூலை 12 அன்று எழுதப்பட்டுள்ளது.


அவர் எழுதிய கடிதத்தில், 2019 ஜூலை 7 ஆம் தேதி, குற்றம் சாட்டப்பட்டவர்களான சஷி சிங்கின் மகன் நவீன் சிங், எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கரின் சகோதரர் மனோஜ் சிங் செங்கர், குன்னு மிஸ்ரா மற்றும் இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டிற்கு வந்து எங்களை மிரட்டிவிட்டு சென்றனர். எங்களுக்கு சாதகமாவும், எங்களுடன் ஒத்துபோகவில்லை என்றால், போலி வழக்கு மூலம் உங்களை சிறையில் தள்ளுவோம் என மிரட்டினார்கள் எனக்கூறப்பட்டு உள்ளது.


மேலும் கடிதத்தில், நீதிபதியை விலைக்கு வாங்குவதன் மூலம் குல்தீப் சிங் மற்றும் சஷி சிங் ஆகியோரின் ஜாமீனை பெற்று, அவர்களை வெளியில் கொண்டு வருவோம். உங்களை ஒரு போலி வழக்கில் சிறையில் அடைப்போம் எனக்கூறி மிரட்டியதாக கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது. 


பாதிக்கப்பட்ட குடும்பம் மூலமாக 2019 ஜூலை 12 ஆம் தேதி எழுதப்பட்ட இந்தக் கடிதம், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, முதன்மைச் செயலாளர் (உள்துறை), டிஜிபி, காவல் ஆய்வாளர், சிபிஐ தலைவர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் (உன்னாவ்) ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது.