இனிமேல் சில ஆங்கில வார்த்தைகளை நீதிமன்றத்தில் பயன்படுத்தக்கூடாது: உச்ச நீதிமன்றம் தடை
Supreme Court banned words: பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் என்ற பட்டியல் ஒன்றை உச்ச நீதிமன்றம் வெளியிட்டு, அவற்றை பயன்படுத்த தடை விதித்துள்ளது. இனிமேல் நீங்கள் எந்தெந்த வார்த்தைகளைப் பயன்படுத்தக்கூடாது தெரியுமா?
புதுடெல்லி: மானபங்கம், விபச்சாரி, இல்லத்தரசி, விபச்சாரம் போன்ற பல வார்த்தைகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. நீதிமன்ற நடவடிக்கைகளின் போது இந்த வார்த்தைகள் இனிமேல் பயன்படுத்தப்படக்கூடாது என உச்ச நீதிமன்றம் பட்டியலிட்டுள்ளது. எனவே, இனிமேல் இந்த சொற்கள், சட்ட சொற்களஞ்சியத்திலிருந்து வெளியேறும். இந்த வார்த்தைகளுக்கு பதிலாக எந்த வார்த்தைகள் பயன்படுத்தப்படும் என்பதற்கு ஒரு முழுமையான கையேடு வெளியிடப்பட்டுள்ளது.
இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் இந்த கையேட்டை வெளியிட்டார். கையேட்டை வெளியிட்ட தலைமை நீதிபதி, "இது நீதிபதிகள் மற்றும் சட்ட சமூகம் சட்ட சொற்பொழிவுகளில் பெண்களைப் பற்றிய ஸ்டீரியோடைப்களை அடையாளம் காணவும், புரிந்து கொள்ளவும், மாற்றவும் உதவும்."
பெண்களைப் பற்றிய தேவையில்லாத வார்த்தைகளை அடையாளம் காணவும், புரிந்து கொள்ளவும், எதிர்க்கவும் நீதிபதிகள் மற்றும் சட்டத்துறை உறுப்பினர்களுக்கு அதிகாரம் அளிப்பதே பாலின ஸ்டீரியோடைப்களை எதிர்த்துப் போராடுவதற்கான கையேட்டின் நோக்கம் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
30 பக்கங்கள் கொண்ட கையேடு புத்தகத்தில் முக்கியமான பிரச்சினைகள், குறிப்பாக பாலியல் வன்முறை தொடர்பான சட்டக் கோட்பாடுகள் உள்ளன.
மேலும் படிக்க | கைவினைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் இந்திய அரசு! 13 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு
தடை செய்யப்பட்ட வார்த்தைகள்
தடை செய்யப்பட்ட வார்த்தைகளுக்கு பதிலாக இந்த வார்த்தைகள் பயன்படுத்தப்படும். "மாயாவினி" அல்லது "பட்சலன் ஔரத்" போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக "பெண்" என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டும் என்று புத்தகம் கூறுகிறது.
விபச்சாரம், விபச்சாரி (Prostitute) போன்ற வார்த்தைகள் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டு, அதற்கு பதிலாக பாலியல் தொழிலாளி என்ற வார்த்தை பயன்படுத்தப்படும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வெளியிட்ட கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Mistress என்ற ஒற்றை வார்த்தையை பயப்னடுத்தாமல், "ஒரு ஆணுடன் காதல் அல்லது திருமணத்திற்கு வெளியே உடலுறவு கொண்ட ஒரு பெண்" என்ற சொற்றொடரைப் பயன்படுத்த வேண்டும்.
"துஷ்பிரயோகம்" (Molestation) என்ற சொல் இப்போது "பொதுவெளியில் பாலியல் துன்புறுத்தல்" என்று அழைக்கப்படவேண்டும். "கே" (Gay) என்ற வார்த்தைக்குப் பதிலாக, ஒரு நபரின் பாலியல் நோக்குநிலையை மிகவும் துல்லியமாக விவரிக்கும் வார்த்தை பயன்படுத்தப்பட வேண்டும்.
House Wife என்ற சொல்லுக்குப் பதிலாக, சட்ட விவாதங்களில், "ஹோம் மேக்கர், ஹோம்மேக்கர்" என்று பயன்படுத்தப்படும்.
"முறையில்லாமல் பிறந்த குழந்தை" (Illegitimate Child) என்ற வார்த்தைக்கு பதிலாக, "திருமணத் தொடர்பைத் தாண்டி பிறந்த குழந்தை அல்லது, திருமணம் ஆகாத பெற்றோர்களுக்கு பிறந்த குழந்தை" என்ற வார்த்தையை இனிமேல் நீதிமன்றங்களில் பயன்படுத்த வேண்டும்.
மேலும் படிக்க | ஹிமாச்சலப் பிரதேச பேரழிவு, பியாஸ் நதியின் பெருஞ்சீற்றத்தினால் 60க்கும் மேற்பட்டோர் பலி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ