முன்னறிவிப்பின்றி ஏற்படும் மின்வெட்டிற்கு இழப்பீடு: டெல்லி அரசு அதிரடி
முன் அறிவிப்பில்லாமல் ஏற்படும் மின்வெட்டுக்கு இழப்பீடு வழங்கப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது.
அன்றாட வாழ்வில் மின்சாரம் என்பது மிக முக்கியமானது. பொதுமக்களுக்கும் நாட்டின் வளர்சிக்கும் தடையில்லா மின்சாரம் முக்கிய தேவையாகும். இதனால் தான் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்த விசியத்தில் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இனிமேல் டெல்லியில் முன் அறிவிப்பில்லாமல் ஏற்படும் மின்வெட்டுக்கு இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளது. அதாவது முன்னறிவிப்பின்றி 1 மணி நேரத்திற்கு மேல் மின்வெட்டு ஏற்பட்டால் 50 ரூபாய் இழப்பீடு மற்றும் 2 மணி நேரத்திற்கு மேல் மின்வெட்டு ஏற்பட்டால் 100 ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் எனவும், அதிகப்பட்சமாக 5000 ரூபாய் வரையில் இழப்பீடு வழங்கப்படும் எனவும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
நேற்று முதல் இந்த அறிவிப்பு டெல்லியில் அமுலுக்கு வந்தது. இதன்மூலம் நாட்டிலேயே முதல்முறையாக முன்னறிவிப்பின்றி ஏற்படும் மின்வெட்டிற்கு இழப்பீடு வழங்கும் திட்டம் டெல்லி அரசு செயல்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.