உபி சட்டசபைத் தேர்தல் 2017: பா.ஜ., தொட்டது சிகரம், மற்ற கட்சி தரைமட்டமானது
உபி சட்டசபைத் தேர்தல் 2017-ல் பாஜக அபார வெற்றி
தேர்தல் வெற்றி பாஜகவுக்கு புதிய உத்வேகத்தை தந்துள்ளதாக பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க அமோக வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் இந்த இரண்டு மாநிலங்களிலும், பா.ஜ.க ஆட்சி அமைக்க இருக்கிறது.
இந்நிலையில் தேர்தல் வெற்றி குறித்து, பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்"-
நாட்டு விடுதலைக்கு பின் ஒரு கட்சி பெற்றுள்ள மிகப்பெரிய வெற்றி இது என்றும், பாஜகவின் வெற்றி சாமான்ய மக்களின் வெற்றி என்றும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
ரசியலுக்கான புதிய வழியை பாரதிய ஜனதாக கட்சி காட்டும் என்று தெரிவித்த அமித் ஷா, ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையை மக்கள் ஏற்றுக் கொண்டதே, தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன. இது நாட்டை புதிய திசைக்கு கொண்டு செல்லும்.
5 மாநிலங்களிலும் பாஜகவுக்கு வாக்களித்த மக்களுக்கு அமித் ஷா நன்றி தெரிவித்தார். மோடியை தூற்றியவர்களுக்கு உத்திரபிரதேச மக்கள் பதில் கொடுத்துள்ளதாகவும், பிரதமர் மீதான தனிப்பட்ட தாக்குதல்கள் எதிர்விளைவுகளை ஏற்படுத்தி உள்ளன என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மேலும் பாஜகவின் கொள்கைகளை மக்கள் ஏற்று கொண்டுள்ளனர் என்றும், குடும்ப அரசியலை ஒழித்து கட்டுவோம் என்று அமித் ஷா உறுதி அளித்துள்ளார். பிரதமர் மோடிக்கு நாளை மாலை 6 மணிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படும் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் முடிவு நிலை 2:30 pm: காங்கிரஸ் 47 தொகுதிகளில் வெற்றி, 29 முன்னிலையாக வழிவகுக்கிறது. ஆம் ஆத்மி கட்சி 16, 5 முன்னிலையாக வழிவகுக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் கேப்டன் அமரீந்தர் சிங்குக்கு வாழ்த்து.
பஞ்சாப் முடிவு நிலை 2 pm: காங்கிரஸ் 46 தொகுதிகளில் வெற்றி, 31 முன்னிலையாக வழிவகுக்கிறது. ஆம் ஆத்மி 12, 9 முன்னிலையாக வழிவகுக்கிறது.
காங்கிரஸ் முன்னாள் கோவா முதல்வர் திகம்பர் காமத் மார்கோவா தொகுதியில் இருந்து வெற்றி
பஞ்சாப்: தேத்தல் ஆணையம் 1:30 pm தகவலின் படி : காங்கிரஸ் 20 தொகுதிகளில் வெற்றி, 59 முன்னிலையாக வழிவகுக்கிறது. ஆம் ஆத்மி 8, 12 முன்னிலையாக வழிவகுக்கிறது.
பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் தோல்வியை ஏற்றுக்கொண்டார், நாளை ராஜினாமா.
கேப்டன் அமரீந்தர் சிங் 51000-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் பாட்டியாலா நகர்ப்புற தொகுதியில் இருந்து வெற்றி பெற்றுள்ளார்.
எந்த கட்சிக்கு ஓட்டுப்போட்டாலும், அந்த ஓட்டுகள் பா.ஜ.,விற்கு மட்டும் தான் சென்றது என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
தேர்ல் முடிவு குறித்து அவர் கூறியதாவது:-
தேர்தல் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. நம்ப முடியவில்லை. முடிவை ஏற்க கடினமாக உள்ளது. ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் கோளாறு உள்ளது. பா.ஜ. ஓட்டு மட்டும் தான் பதிவாகியது. எந்த கட்சிக்கு ஓட்டுப்போட்டாலும், அந்த ஓட்டுகள் பா.ஜ.,விற்கு மட்டும் தான் சென்றது. ஓட்டுப் பதிவு இயந்திரங்களில் அதுபோல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும் பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது. முஸ்லிம்கள் ஓட்டு பா.ஜ.,விற்கு எப்படி சென்றது. ஓட்டுச்சீட்டு மூலம் மீண்டும் தேர்தலை சந்திக்க அமித்ஷா தயாராக உள்ளாரா. பா.ஜ., ஜனநாயகத்தை கொலை செய்துள்ளது. அக்கட்சியின் வெற்றி ஜனநாயகத்திற்கு ஆபத்தானது. தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது என என்னிடம் பத்திரிகையாளர்கள் உட்பட பலர் முன்னர் கூறினார். ஆனால் அப்போது அதனை நான் ஏற்கவில்லை. இந்த முடிவு தொடர்பாக தேர்தல் கமிஷனில் புகார் அளிப்போம். தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
அனைத்து தரப்பு மக்களும் பணமதிப்பு நீக்க நடவடிக்கையை ஏற்றுக் கொண்டார்கள் என்று கூற முடியாது. ஆனால் உத்தரபிரதேச தேர்தலில் பாஜக வெற்றி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மீண்டும் ஒரு முறை உத்தரப்பிரதேச மாநிலத்தில் சுனாமி போல் மோடி அலை வீசி இருக்கிறது.
நாட்டின் மிகப்பெரிய மாநிலமான 403 சட்டசபை தொகுதிகள் கொண்ட உத்தரப் பிரதேச சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை தொடங்கிய முதல் பா.ஜனதா முன்னணியில் இருந்து வந்தது. கடைசியாக 403 தொகுதிகளின் முன்னணி நிலவரம் வெளியானபோது பா.ஜனதா 307 இடங்களில் முன்னிலை பெற்றது. இதன் மூலம் உத்தரப்பிரதேசத்தில் பா.ஜனதா தனி மெஜாரிட்டியுடனும் அசுர பலத்துடனும் ஆட்சியைப் பிடித்துள்ளது. மற்ற கட்சிகள் அனைத்தும் காணாமல் போனது போல் மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ளன.
உத்தரப்பிரதேசம்: பாஜக -316; சமாஜ்வாடி+காங்., -58; பகுஜன் சமாஜ் -23; மற்றவை -6;
மணிப்பூர்: பாஜக -19; காங்கிரஸ் -17; மற்றவை -9;
கோவா: பாஜக -10; காங்கிரஸ் -11; மற்றவை -7;
உத்தரகண்ட்: பாஜக -55; காங்கிரஸ் -12; பகுஜன் சமாஜ் -0; மற்றவை-3;
பஞ்சாப்: பாஜக+அகாலி -16; காங்கிரஸ் -78; ஆம் ஆத்மி -23; மற்றவை-0;
உத்தரகண்ட் முதல்வர் ஹரீஷ் ராவத் பெரும் பின்னடைவு. இந்நிலையில், தற்போது ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் முதல்வர் ஹரிஷ் ராவத், ஹரித்வார் (தனி) தொகுதியில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்திருக்கிறார். 12,400 வாக்குகள் வித்தாயசத்தில் அவர் மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளார். அதே சமயத்தில் அவர் போட்டியிடும் மற்றொரு தொகுதியான கிக்ஹாவில் அவர் முன்னிலை வகிக்கிறார்.
உத்தரப்பிரதேசம்: பாஜக -302; சமாஜ்வாடி+காங்., -71; பகுஜன் சமாஜ் -17; மற்றவை -12;
மணிப்பூர்: பாஜக -11; காங்கிரஸ் -7; மற்றவை -11;
கோவா: பாஜக -1; காங்கிரஸ் -6; மற்றவை -4;
உத்தரகண்ட்: பாஜக -51; காங்கிரஸ் -15; பகுஜன் சமாஜ் -0; மற்றவை-4;
பஞ்சாப்: பாஜக+அகாலி -16; காங்கிரஸ் -70; ஆம் ஆத்மி -26; மற்றவை-0;
மோடியின் வருகை உ.பி.,யின் களத்தை மாற்றியது. உ.பி., உத்தரகண்ட்டில் “மோடி மேஜிக்” வேலை செய்தது
உ.பி.யில் பாஜக வரலாறு காணாத வெற்றி. உபி.,யில் 15 ஆண்டுக்குப் பிறகு ஆட்சியை கைப்பற்றியது பாஜக
உ.பி.,யில் ஆரம்பம் முதலே முன்னிலை பெற்ற பா.ஜ., தற்போது, 300 தொகுதிமக்கு அதிகமான முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் தனிப்பெரும்பான்மை பலத்தடன் பாஜக உள்ளது. எனவே அக்கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கியு கொண்டாடி வருகின்றனர்.
உத்தரகண்டில் மலர்கிறது "தாமரை".... ஓய்கிறது காங்கிரஸ்!
உத்தரகண்டில் வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. ஆளும் கட்சியான காங்கிரஸுக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
உ.பி.,யில் வரலாறு படைக்கும் பாஜக.
403 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக 243 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதனை பாஜக ஆதரவாளர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்
பஞ்சாப்பில் ஆட்சியை பிடிக்கும் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை....
உத்தரகாண்ட்டிலும் பாஜக ஆட்சியை கைப்பற்றியது
உத்தரகண்ட் மற்றும் உத்தர பிரதேசத்தில் பாஜக வலுவான முன்னிலையில் உள்ளது.
பஞ்சாப்பில் காங்கிரஸ் முன்னிலை
கோவாவில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.
உத்ரகண்ட்டில் பாஜக 31 இடங்களிலும் முன்னிலை காங்கிரஸ் 2 இடங்கள் பெற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் பாஜக 180 இடங்களில் முன்னிலை மணிப்பூரில் ஐரோம் ஷர்மிளா முன்னிலை
மணிப்பூரில் காங்கிரஸ் 2 இடத்தில் முன்னிலை, 2வது இடத்தில் பாஜக, இரோம் ஷர்மிளா பின்னடைவை சந்தித்துள்ளார்.
பஞ்சாப்பில் காங்., முன்னணி; உ.பி.-யில் பாஜக முன்னணி
பஞ்சாப் சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சியும், உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜகவும் முன்னிலை வகித்து வருகிறது.
உபியில் சட்டசபைத் தேர்தல் பாரதிய ஜனதா (BJP) முன்னிலை
பா.ஜ., 10 தொகுதிகளிலும், சமாஜ்வாதி காங்கிரஸ் கூட்டணி 7 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 2 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.
நடந்து முடிந்த 5 மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின்றன.
வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையை ஒட்டி 5 மாநிலத்திலும் பலத்த பாதுகாப்பு. தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் பாதுகாப்பு தீவிரம் -வாக்கு எண்ணிக்கை நடக்கும் மையங்களை சுற்றி 144 தடை
உபியில் சட்டசபைத் தேர்தல் 403, உத்தரகாண்ட் சட்டசபைத் தேர்தல் 70, பஞ்சாப் சட்டசபைத் தேர்தல்117, கோவா சட்டசபைத் தேர்தல் 40, மணிப்பூர் 60 சட்டசபைத் தேர்தல் தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது
பஞ்சாபில் ஆட்சியை அகாலிதளம்- பாஜக பறி கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளதால் அங்கு ஆட்சியைப் பிடிக்கப் போவது காங்கிரஸா அல்லது ஆம் ஆத்மியா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
முன்னதாக, வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் ஒன்றான சிவோட்டர் கருத்துக் கணிப்புப்படி, உத்தரப்பிரதேசம், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் பாஜக வெற்றி பெறும் எனவும், பஞ்சாப்பில் ஆம் ஆத்மி வெற்றி பெறும் எனவும், உத்தரக்காண்டில் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் சம அளவிலான இடங்களை பெறும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வெளியான பெரும்பாலான கருத்துக் கணிப்புகளும் பாஜக-வே வெற்றி பெரும் என கணித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.