உ.பி தேர்தல் 2017: பாஜக 202 தொகுதிகளில் வெற்றி பெறும்
உ.பி., மாநிலத்தில், 202 தொகுதிகளை கைப்பற்றி பாஜக ஆட்சியை பிடிக்கும் என, டைம்ஸ் நவ்- வி.எம்.ஆர்., கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி: உ.பி., மாநிலத்தில், 202 தொகுதிகளை கைப்பற்றி பாஜக ஆட்சியை பிடிக்கும் என, டைம்ஸ் நவ்- வி.எம்.ஆர்., கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.
உ.பி.,யில், 403 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஏழு கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்த 403 சட்டசபை தொகுதிகளில் 202 தொகுதிகளை கைப்பற்றி பாஜக ஆட்சியை பிடிக்கும் என டைம்ஸ் நவ்- வி.எம்.ஆர்., கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.
கடந்த 2012-ம் ஆண்டு தேர்தலில் பாஜக 155 தொகுதிகளை கைப்பற்றியது. வரும் தேர்தலில் 34 சதவீத ஓட்டுக்களை பெற்று, 202 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமாஜ்வாடி-காங்கிரஸ் கூட்டணி 147 தொகுதிகளில் வெற்றி பெறும்.
டைம்ஸ் நவ்- வி.எம்.ஆர்., கருத்து கணிப்பின் படி சமாஜ்வாடி-காங்கிரஸ் கூட்டணி 147 தொகுதிகளில் வெற்றி பெறும் என கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமாஜ்வாடி-காங்கிரஸ் கூட்டணி, 31 சதவீத ஓட்டுக்களை பெரும் என டைம்ஸ் நவ்- வி.எம்.ஆர்., கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி
மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, 24 சதவீத ஓட்டுக்களை பெற்று, 47 தொகுதிகளை கைப்பற்றும்.
முதல்வர் அகிலேஷ்
முதல்வராக யார் வர வேண்டும் என்பதில், 39 சதவீதம் பேர், தற்போதைய முதல்வர் அகிலேஷ் யாதவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.