எருமைக்கு டிஎன்ஏ சோதனை செய்த உரிமையாளர்! காரணம் என்ன தெரியுமா?
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த எருமை உரிமையாளர் ஒருவர் தனது எருமைக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
மனிதர்களுடைய உண்மையான பெற்றோரைக் கண்டறிய டிஎன்ஏ சோதனை செய்யப்படுவது குறித்து கேள்விபட்டிருப்பீர்கள். ஆனால் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஷாம்லி எனும் பகுதியில் தான் ஆசையாக வளர்த்த எருமை ஈன்ற கன்றை கண்டுப்பிடிக்க உரிமையாளர் ஒருவர் தனது வளர்ப்பு பிராணியான எருமைக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்துள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஆகஸ்ட் 25, 2020 அன்று இரவு, ஷாம்லி மாவட்டத்தின் ஜின்ஜானா காவல் நிலையப் பகுதியில் உள்ள சந்திரபால் காஷ்யப்பின் வீட்டிலிருந்து ஒரு எருமைக்கன்று திருடப்பட்டது.
மேலும் படிக்க | Viral Video: அஸ்ஸாமில் சாலையை ஹாய்யாக கடந்து சென்ற பெரிய்ய்ய்ய மலைப்பாம்பு..!!
பல நாட்கள் தேடிய பிறகு, இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் சஹாரன்பூர் பீன்பூர் கிராமத்தில் எருமைக் கன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவர் அங்கு வந்து எருமைக் கன்றைத் திருப்பிக் கொடுக்குமாறு கேட்டபோது, கன்று அவர்களுடையது என்றும், தர முடியாது என்றும் அங்கிருந்தவர்கள் மறுத்துள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர் மீண்டும் பொலிஸில் முறையிட்டார்.
பின்னர் பாதிக்கப்பட்ட உரிமையாளர் உயர் அதிகாரிகளுக்கும், முதல்வருக்கும் இது குறித்து கடிதம் எழுதினார். இதையடுத்து எஸ்பி சுகிர்தி மாதவ், எருமைக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்து கண்டுப்பிடிக்கப்பட்ட கன்றின் டிஎன்ஏவுடன் ஒப்பிட்டு பார்க்குமாறு உத்தரவிட்டார்.
மேலும் படிக்க | குரலால் காட்டை உலுக்கும் காட்டு ராஜா
மேலும் உத்தரவின் பேரில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த திருட்டு வழக்கில், டாக்டர் குழுவினர், எருமை மற்றும் அதன் கன்றுக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்துள்ளனர். எருமையின் டிஎன்ஏ சோதனை விவகாரம் தற்போது கிராமம் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் பரவலாக பேசப்படுகிறது.
மேலும் இந்த பரிசோதனையின் முடிவுகளுக்காக கிராம மக்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது.
மேலும் படிக்க | பறவை கூட்டை தாக்கிய பாம்பு; சும்மா இருந்தா பறவை!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR